ஆன்மீகம்

வெளிநாட்டுக்கு போகணும்னு விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த கோவிலுக்கு போய் வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனை சீக்கிரம் நிறைவேறுமாம்!

Jan 14 2022 09:37:00 PM

இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டை சேர்ந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் நம்மை அடிமையாக வைத்திருந்தது தான். நம்ம நாடு முன்னேறணும்னா நம்ம நாட்டில் உள்ள மக்கள் நிறைய பேர் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்று, தொழில் புரிந்து வந்தால் தான் எல்லா நாடுகள் பற்றிய விவரமும் நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சில தகுதிகளும் கிடைக்கும்.

visa venkadeshwara tmple

இந்த விஷயத்தை நான் சொல்லல, விவேகானந்தரே சொன்ன பொன்மொழிகள் தான் இவை. நம்ம நாட்டில் இருக்க நிறைய படித்த இளைஞர்களின் கனவு என்னவென்றால் வெளிநாட்டில் சென்று நல்ல கம்பெனியில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது தான். அதுக்கும் மேல சிலர் நான் வெளிநாட்டில் போய் படிச்சு பெரிய ஆளாக வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிநாடு செல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

visa venkadeshwara tmple

விசா இல்லாம இந்தியாவை விட்டு எங்கயும் நகர முடியாது. அந்த விசா எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. எல்லாம் சரியாக இருந்தாலும் அது குறை, இது குறை என்று சொல்லி வெளிநாடு செல்வதற்கான விசாவை அரசாங்கம் கேன்சல் செய்துவிடுவார்கள். தெலுங்கானா மாநிலத்தில் ஹிமாயத் நகரில் புகழ்பெற்ற விசா வெங்கடேஸ்வரா ஆலயம் அமைந்துள்ளது.

visa venkadeshwara tmple

இந்த ஆலயம் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ பக்த ராமதாஸ் என்ற ஞானியின் உறவினர்களால் கட்டப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து வெளிநாடு செல்ல விசா கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டால் அந்த நபருக்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா நாட்டிற்கு படிக்க மற்றும் வேலைக்கு செல்ல விசா கிடைக்க வேண்டும் என்று இங்கு வந்து வேண்டிக்கொண்டால் உடனடியாக பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

visa venkadeshwara tmple