ஆன்மீகம்

லிப்ட் மூலம் நடைபெறும் அபிஷேகங்கள்! மிகவும் பிரமாண்டமாக காட்சி தரும் அனுமன்!

Nov 19 2021 06:40:00 PM

விழுப்புரம் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ராமர் ராவணனை போரிட்டு வென்றபோது அவருக்கு உதவிய அனுமன் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அந்த தோற்றத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆலயத்தை வடிவமைத்துள்ளனர். இங்குள்ள அனுமன் பஞ்சமுகத்தில் காட்சியளிக்கிறார். ராமர் ராவணனை வென்றபோது பஞ்சமுகத்தில் தான் அனுமார் இருந்தார் என்று வரலாறு சொல்கிறது.

vilupuram anjaneyar temple

36 அடி உயர ஆஞ்சிநேயர் சிலை சுமார் 500 வருடங்களுக்கு முன்னரே மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து பக்தர்கள் அனுமனை வணங்குகிறார்கள். அவர்களின் தேவை பூர்த்தியானவுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

vilupuram anjaneyar temple

ராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கல்லை இங்கு மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். பல ரிஷிகள் இந்த இடத்தில் வாழ்ந்து பக்தர்களுக்கு உபதேசம் சிஎத்தனர். அதன் அடிப்படையில் இந்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவிலை கட்டியுள்ளனர். ஆஞ்சநேயர் உண்மையில் மிகவும் சக்தி கொண்டவர் என்பதால் அவருக்கு மிகவும் பிரம்மாண்டமாக சிலை கட்டியுள்ளனர். சிறுதாவூரில் கிடைத்த 150 டன் எடைகொண்ட பிரம்மாண்ட கல்லை கொண்டு இந்த ஆஞ்சநேயர் சிலையை நிறுவியுள்ளனர்.

vilupuram anjaneyar temple

12 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் தெற்கு பார்த்து இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை இந்த சிலைக்கு அபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் தேவைப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஒரு விசேஷ மணி உள்ளது. இந்த மணி சுமார் 1200 கிலோ எடை கொண்டது. இந்த மணி ஒருமுறை அடித்தால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை அந்த சத்தம் கேட்கும் என்று சொல்லபடுகிறது.

vilupuram anjaneyar temple