ஆன்மீகம்

மகாலட்சுமி நோன்பு, சுமங்கலி பூஜைகளில் கொடுக்கும் இந்த தட்டை வாங்ககூடாதா? தலைகீழாக சாஸ்திரத்தை பின்பற்றிக்கொண்டிருக்கிறோமா? இப்படியெல்லாம் செய்தால் விரதத்தின் முழுப்பலன் கிட்டாது!

Feb 13 2021 02:32:00 PM

நவராத்திரி, ஆடிவெள்ளி, மகாலட்சுமி நோன்பு, சுமங்கலி பூஜை என இது போன்ற பண்டிகை காலத்தில் ஒரு தட்டில் ஜாக்கெட் பிட், அதோடு இரு பிளாஸ்டிக் டப்பாவில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஒரு மிட்டாய், இரண்டு கண்ணாடி வளையல், பூவுடன் தாம்பூல தட்டை கொடுப்பார்கள். இந்த தாம்பூலத்தை வேண்டாம் என சொல்லாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். பண்டிகை காலத்தில் இது போன்ற தட்டை கொடுப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மாற்றிக்கொள்வோம். இது இல்லாமல் கோவிலிலும் கொடுப்போம். பல நேரங்களில் நாம் கொடுத்த ஜாக்கெட்பிட் நமக்கே திரும்பிவரும். அதில் உள்ள ஸ்டிக்கர் கூட கிழிக்காமல் வரும். 

varalakshmi-nombu-prasatham mangaliya-poojai

நாம் எடுத்துக்கொடுக்கும் ஜாக்கெட் பிட் மிகவும் குறைவான விலையில் தான் எடுத்துக்கொடுப்போம். சில நேரங்களில் அந்த துணியை போட்ட இரண்டாவது நாளிலே அதன் நிறம் மங்கிவிடும். இரண்டுமுறை தண்ணீரில் போட்டு எடுத்தாலே, கலர் மங்கி போகுது. இதற்கு ஏன் தையக்கூலி கொடுத்து, தைத்து கொண்டிருக்க வேண்டும் என பலர் இந்த ஜாக்கெட்பிட்டை தைக்காமல் அப்படியே வைத்துக்கொள்ளவார்கள். 

varalakshmi-nombu-prasatham mangaliya-poojai

சில வீடுகளில் நாம் வாங்கிக்கொடுத்த ஜாக்கெட் பிட்டை, வீடு துடைக்கும் துணி அல்லது அடுப்பறையில் கரித்துணி போல பயன்படுத்துவார்கள். நாங்க வாங்கிக்கொடுத்த ஜாக்கெட் பிட்டை பக்கத்துவீட்டுக்காரங்க அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள். கரித்துணியாக புழங்கவா ரொம்ப பவ்யமாக பயபக்தியோடு வாங்கிக்கிட்டீங்க? என பலமுறை அவர்களை பார்த்தே கேட்டதுண்டு. அவர்கள் சொன்னார்கள், இந்த துணி இரண்டே நாளில் கலர் போய்டும், வெளுத்துப்போன துணிய போட்டுகிட்டு இருக்க முடியுமா? பீரோவில் அப்படியே சும்மா இருப்பதற்கு பதில், நாங்க இதற்காவது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றாள். பக்கத்துவீட்டுக்காரி சொன்னதும் சரிதானே? 

varalakshmi-nombu-prasatham mangaliya-poojai

அடுத்த மங்கல்ய பூஜையில், ஜாக்கெட் துணிக்கு பதில் அதேவிலையில் கிடைக்கும் காட்டன் துப்பட்டாவை தட்டில் வைத்தோம். கோவிலுக்கு வந்த எல்லோரும் எங்களது ஐடியாவை பாராட்டி, அடுத்தமுறை அவர்களும் எங்களைப்போல செய்கிறோம் என கூறினார்கள். வஸ்திரம் வைப்பது தான் சாஸ்திரம், ஜாக்கெட் பிட் தான் வைக்க வேண்டும் என்பதில்லை. 

varalakshmi-nombu-prasatham mangaliya-poojai

அடுத்து, சின்ன சின்ன டப்பாவில் விற்கும் மஞ்சள் குங்குமத்திற்கு பதில், வீட்டில் நாங்க பயன்படுத்தும் மஞ்சள் குங்குமத்தை பொட்டலம் போல கட்டிவைத்தோம். கடையில் சின்ன சின்ன டப்பாவில் விற்கும் மஞ்சள் குங்குமத்தை நெற்றியில் வைத்தால் அ ரிப்பு ஏற்படுவதாக பல பெண்கள் கூற கேட்டுள்ளோம். கோவிலில் மங்கல்ய பூஜை நடக்கிறது என்றாலே, கடைகளில் இது போன்ற கெ மிக்கல் நிறைந்த மஞ்சள் குங்குமம் விற்பார்கள். நாமும் ஏதோ சா ங்கியம், தட்டில் வைக்க வேண்டும் என வாங்கிச்செல்வோம். 

varalakshmi-nombu-prasatham mangaliya-poojai

அடுத்து மஞ்சள் கயிறு, நைலான் கயிறு போல வாங்கி கொடுக்காமல், சவுகரியமாக வாங்கிக்கொடுங்கள்.  கண்ணாடி வளையலோடு பட்டு துணியால் சுற்றிய வளையலையும் வைத்தோம். எங்களுடைய தாம்பூலத்திற்கு எல்லோரிடமும் பாராட்டு குவிந்தது..வரலட்சுமி நோன்பு, மங்கல்ய விரதம் எதுவாக இருந்தாலும், நாம் கொடுக்கும் தட்டில் இருப்பது கண்டிப்பாக இல்லாதவர்களை சென்றடைய வேண்டும் அல்லது வாங்கியவர்கள் அதனை பயன்படுத்த வைக்க வேண்டும். ஏதோ விரதம் இருக்கேன், வாங்கி கொடுக்க சொன்னார்கள் என வாங்கி கொடுத்து நமது பூஜைகளையும் பண்டிகைகளையும் கடமையென பின்பற்ற வேண்டாமே!