தெய்வீகம்

விரதத்தால் பூரித்து போகும் பெருமாள், கேட்டதை கொடுப்பாராம்! இந்த ஒருநாளின் அருமையை புரியாமல், இத்தனை நாளா வெறும் சொர்க்கவாசலில் மட்டுமே புகுந்து வந்தோமே!

Jan 10 2022 06:40:00 PM

வைகுண்ட ஏகாதசி அன்று, ஏன் சொர்க்கவாசல் திறந்து மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்? எல்லா மாதத்திலும் தான் ஏகாதசி வருகிறது. அப்படி இருக்க, மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி மட்டும் பிரசித்தி பெற்று கொண்டாடபடுகிறதே? ஏன்? வருடம் முழுக்க கோவிலுக்கு போகாதவர்கள் கூட, வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் பெருமாளை வணங்கிவிட்டு, சொர்க்கவாசல் வழியே சென்று வருவார்கள். கேட்டால் வருடம் முழுக்க செய்த பாவம் எல்லாமே, வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியே சென்றுவந்தால், முழுவதுமாக நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பார்கள். இது உண்மையா என்றால் பொய் என்றுதான் சொல்ல வேண்டும். 

vaikunta-ekadasi-2022 vaikunta-ekadasi

அவரவர் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்டே இந்த உலகை விட்டு நீங்க முடியும். பிறகு எதற்கு கடவுள், கோவில்? இனி வரும் காலங்களில் எந்த பாவமும் செய்யாமல் நம்மை நல்வழியில் புகுத்தி, செய்த பாவங்களுக்கான பரிகாரத்தை இந்த ஜென்மத்தில் நாம் கழித்து கொண்டிருக்கும் போது, கடவுள் துணையாக வர வேண்டும். செய்த பாவத்தின் விளைவு பெரிதாக தாக்காமல் காப்பது கடவுளின் அருள் மட்டுமே! அதற்கு தான் இத்தனை தெய்வங்கள், கோவில்கள்.

vaikunta-ekadasi-2022 vaikunta-ekadasi

சரி விதியை மாற்ற முடியுமா? என்றால் அது கடவுளால் மட்டுமே முடியும். வைகுண்ட ஏகாதசி போன்ற குறிப்பிட்ட விஷேச நாட்களில் கடவுளிடம் உருகி வேண்டிக்கொண்டால் கடவுள் வேண்டியதை கொடுப்பார். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் சிவபெருமான் கேட்டதை கொடுப்பார் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு வைகுண்ட ஏகாதசி விரதமும். 

vaikunta-ekadasi-2022 vaikunta-ekadasi

இந்த விரதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானலும் இருக்கலாம். க ர்ப்பிணிகள் கட்டாயம் வேண்டாம். மாதவி லக்கு உள்ளவர்கள் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலே விரதம் இருக்கலாம். வருகிற ஜனவரி 12 அன்று தசமி துவங்குகிறது. அன்று இரவு முதல் உணவு உண்ணாமல் விரதம் இருக்க துவங்கலாம். அடுத்தநாள் ஜனவரி 13 முழுதும் துளசி தீர்த்தம் மட்டுமே குடித்து கொள்ளவும். வேண்டுமானால் அவல் எடுத்துக்கொள்ளலாம்.  ஜனவரி 13 அன்று சொர்க்கவாசல் திறப்பு அன்று கோவிலுக்கு சென்றுவிட்டு விரதத்தை தொடருங்கள். அன்று முழுவதுமாக தூங்க கூடாது. அடுத்த நாள் ஜனவரி 14 பொங்கல் அன்று காலை ஆறுமணிக்கே உணவு உண்டுவிடலாம். உண்ணும் முன் நீங்க சமைத்ததை கடவுளுக்கு இலை போட்டு நெய்வேத்தியம் செய்துவிட்டு உண்ணுங்கள். அடுத்து விரதம் முடிக்கும் முன் யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் செய்வது கட்டாயம். அடுத்து ஜனவரி 14 அன்று மாலைக்குமேல் தூங்கி கொள்ளலாம். 

vaikunta-ekadasi-2022 vaikunta-ekadasi

இப்படி வைகுண்ட ஏகாதசி இருப்பதால் என்ன நன்மை என்றால், அன்று மட்டும் கடுமையாக விரதம் இருக்கும்போது, பெருமாள் கேட்டதை உடனே கொடுப்பார் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பப்படும் உண்மை. பொதுவாக விரதம் என்பது உ றுப்புகளை புத்துணர்வாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. கூடவே கண்விழித்து விரதம் இருக்கும்போது, மனதின் பக்குவமடைகிறான், சுயகட்டுப்பாடு மேலோங்கும். இதோடு பெருமாள் கேட்டதை கொடுப்பார் எனும்போது, ஏகாதசியை ஏனோ தானோ என எடுத்துக்கொள்ளலாமா?