தகவல்கள்

உங்க வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினால் இதையெல்லாம் முதலில் வீட்டிலிருந்து தூக்கி போடுங்க!

Sep 22 2021 11:18:00 AM

பொதுவாக மக்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடிவதில்லை. அதனால் நம் வீட்டில் சுத்தமாக இல்லாத விஷயங்கள் நம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொடுக்கலாம். இன்றைய பதிவில் எந்த மாதிரியான பொருள்கள் உங்களுடைய வீட்டில் இருந்து அகற்றப்பட வேண்டியவை என்று பார்ப்போம்.

unwanted-materials home-cleaning

பழைய பொருட்கள்:

ஸ்டோர் ரூம் இல்லாத வீடுகளைப் பார்ப்பது மிகவும் அரிது. அவனவன் தங்குவதற்கே வீடு இல்லாத நிலையில் பலரும் வீட்டில் பழைய பொருட்களுக்காக ஒரு அறை ஒதுக்குவது மிகவும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாக உள்ளது. தேவையற்ற பொருட்கள், உடைந்த பொருட்கள் மற்றும் பழைய உபகரணங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இவை எதிர்மறை சக்திகளை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற பொருட்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனே அகற்றுங்கள்.

unwanted-materials home-cleaning

சிலந்தி வலை:

உங்கள் வீட்டில் சிலந்தி கூடு கட்டுவது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என்பதால் அதை உடனடியாக சுத்தம் செய்வது நல்லது. சிலந்தி வலை எப்போதும் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் இது அழகான வீட்டை அசுத்தமாக்குகிறது. சிலந்தி வலையில் உள்ள அதிகப்படியான தூசி நீங்கள் சுவாசிக்கும் காற்றின் தூய்மையை பாதிக்கும். இது சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சிலந்தி வலைகள் வீட்டில் இருந்தால் மகா லட்சுமி வீட்டை விட்டு வெளியேறுவாள்.

unwanted-materials home-cleaning

உலர்ந்த தாவரங்கள்:

வீட்டைச் சுற்றி உலர்ந்த செடிகள் ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுவது நல்லது. இந்த உலர்ந்த தாவரங்கள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் ஏதேனும் செடி காய்ந்திருந்தால், அதை உடனடியாக அகற்றவும். வீட்டைச் சுற்றி பசுமையான பூக்களை வைத்திருங்கள். இவை எதிர்மறை சக்திகளை தடுக்கின்றன.

unwanted-materials home-cleaning

உடைந்த பொருள்கள்:

ஜோதிடத்தின் படி பழைய உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. உடைந்த பொருட்களை சேமித்து வைத்து அதை சரி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உடைந்த பொருட்களை வீட்டில் பல நாட்கள் வைத்திருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

unwanted-materials home-cleaning

அழுக்கு:

வீட்டின் பல பகுதிகள் சிலந்தி வலைகளைப் போல தூசி மற்றும் அழுக்காக இருந்தால் மகாலட்சுமி வீட்டில் தங்குவதில்லை. எனவே தினமும் சிறிது உப்பு கலந்த நீரில் வீடு முழுவதையும் துடைப்பது நல்லது. இது வீட்டை சுத்தம் செய்வதோடு வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் நீக்கும். நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய மிக முக்கியமான பொருள் உப்பு. எனவே மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்க உப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.