தெய்வீகம்

அம்பா சமுத்திரத்தில் வேண்டிய வரம் வழங்கும் பெருமாள் ஆலயம் : குழந்தை பாக்கியம் கைகூட, இல்லற வாழ்க்கை நிம்மதி பெற பெருமாளை வழிபடுவோம்.

Feb 13 2021 10:51:00 AM

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் அருகில் அமைந்துள்ளது புருசோத்தமர் பெருமாள் ஆலயம். இந்த ஆலயம் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாகத்த்தான் இருக்கும். ஆனால் இங்கே அருள்புரியும் பெருமாளின் மகிமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இயற்கை அழகுகளுக்கு இடையே இந்த ஆலயம் விவசாய நிலங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

tnvweli ambasamuththiram perumal temple

புத்திர பாக்கியம் வேண்டி பாரந்தக சோழரால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. எல்லா பெருமாள் கோவில்களிலும் பெருமாளின் ஒரு கையில் தான் சக்கரம் இருக்கும். ஆனால் வரலாற்று சிறப்பாக தன் இரு கரங்களிலும் திருமால் சக்கரத்தை வைத்துள்ளார்.

tnvweli ambasamuththiram perumal temple

பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பதால் "அஷ்ட புயங்கர பெருமாள்" என்றும் அழைக்கப்படுகிறார். கருடாழ்வாரின் வலது கையில் பெருமாளின் பாதமும், இடது கையில் உள்ள மலரில் தாயாரின் பாதமும் உள்ளது. தாய், தந்தையை ஒரு மகன் எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்று இந்த சிலை நமக்கு உணர்த்துகிறது. கருடாழ்வாரின் கீழே தாமரை பீடம் அமைந்து காட்சியளிக்கிறது. ஆதிசேஷன் பகவானின் த லை க் கு மேலே குடைபோல காட்சி அளிப்பது பார்ப்பவர்களை ஆனந்த கடலில் அதிசயிக்க வைக்கிறது.

tnvweli ambasamuththiram perumal temple

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மணப்பேறு, மகப்பேறு வேண்டி இங்கே பக்தர்கள் குவிகிறார்கள். தங்களுடைய தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் இங்கே வரும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். புரட்டாசி சனிக் கிழமைகளில் இங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tnvweli ambasamuththiram perumal temple

புதிதாக திருமணம் ஆனவர்கள் இங்கே வந்து வழிபட்டால் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும் என்றும், இல்லறம் செழிக்கும் என்றும் கோவில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tnvweli ambasamuththiram perumal temple