தகவல்கள்

உங்க வீட்டு பக்கம் பாம்பு, பல்லி எதுவும் அண்டாது! சுடு தண்ணீர் போதுங்க! காடு, தோட்டம் வைத்திருப்போரின் கவனத்திற்கு!

Sep 22 2021 11:05:00 PM

ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டது. காலையில் இருந்து பாம்பை தேடுகிறோம். மாலையே வந்துவிட்டது. வீட்டையே அலசி விட்டோம். பாம்பு கண்ணில் தென்படவே இல்லை. வெளியே சென்றுவிட்டது என கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக தூங்க சென்றோம். திடீரென ஒரு சத்தம். மனைவி அலறி அடித்து குழந்தையோடு வெளியே வருகிறார்.

home-tips simple-science

என்னவென விசாரித்தால், குழந்தையை தூங்கவைத்துவிட்டு தொட்டிலில் போட சென்றால், பாம்பு தொட்டிலுக்குள் படுத்திருந்துள்ளது. மனைவி பயந்து தொட்டிலை பிடித்து வீசி எறிந்துவிட்டு வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் தொட்டிலோடு வெளியே தூக்கிப்போட்ட பாம்பை எந்த அறையில் தேடியும் தென்படவில்லை. வெளியேவும் செல்லவில்லை. 

home-tips simple-science

வீட்டிற்குள் எங்கேயோ உள்ளது. வீட்டில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் கூட பாம்பு தென்படவில்லை. வீட்டிற்குள் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இறுதியாக வீட்டிற்குள் புகுந்த பாம்பை வெளியே கொண்டுவர நாங்க செய்த யுக்திகள் இருக்கே? முதலில் சுடு தண்ணீர் கொண்டு வீடு முழுக்க கழுவி விட்டோம். நிலத்தில் எங்காவது படுத்திருந்தால் சூடு தாங்காமல் வந்திருக்கும். இதன் மூலம் நிலத்தில் எங்கேயும் இல்லை என்பதை புரிந்து கொண்டோம். அப்படியானால் கண்டிப்பாக வீட்டில் உள்ள ஏதாவது சந்துபொந்தில் உள்ளது என்பதை மட்டும் உணர்ந்து கொண்டோம். 

home-tips simple-science

அடுத்து பக்கத்தில் வீடு கட்ட பயன்படுத்தும் வைப்ரேட்டர் கொண்டு நடு ஹாலில் அதிர்வை ஏற்படுத்தினோம். வைப்ரேட்டர் ஆன் செய்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்து பாம்பு வெளியே வந்தது. என்ன ஒரு வேகத்தில் வெளியானது என்றால் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை, பாம்பு மளமளவென வெளியே செல்ல ஆரம்பித்தது. பின்னர் அதனை வெளியே அடித்து கொ ன்றுவிட்டார்கள். பாம்பு வீட்டிற்குள் புகுந்து விட்டால், பாம்பை வெளியே கொண்டுவர புகை போடுங்கள். பாம்பு கண்டிப்பாக வெளியே வந்துவிடும். கேஸ் சிலிண்டர் உள்ள அறையில் கவனம் தேவை. இல்லையெனில் அறை முழுக்க பூண்டு மற்றும் உப்பு கரைசல் கொண்டு தெளித்துவையுங்கள். அந்த நெடிக்கே பாம்பு வெளியே வந்துவிடும். இன்னும் எளிதான வழி என்னவென்றால், மண்ணெண்ணெய் கொண்டு வீடு முழுக்க தெளித்து விடுங்கள். பாம்பு அண்டவே அண்டாது.