ஆன்மீகம்

கிழக்கு வாசலில் நுழைந்து மேற்கு பக்கமாக வெளியேறும் பக்தர்கள்! இந்த ஆலயத்தின் தீர்த்தங்களில் குளித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

Nov 19 2021 04:19:00 PM

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்னும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் ஒன்று உள்ளது. இங்கே உலகப் புகழ்பெற்ற லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முதலில் பிரம்மஹத்தி தோஷம்னா என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது.

thiruvidai maruthur lingeswarar temple

நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்ததால் அந்த நபருக்கு பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டிய மன்னன் ஒருவர் ஒரு விலங்கை வேட்டையாடும் போது தெரியாமல் அருகில் இருந்த மனிதனின் மீது பட்டு அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனால் அந்த பாண்டிய மன்னன் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிப்பட்டார்.

thiruvidai maruthur lingeswarar temple

அப்போது திருவிடை மருதூரில் உள்ள லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும் என்று சிலர் சொல்வதைக்கேட்டு அந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டார். அந்த ஆலயத்தில் இவர் நுழைந்தபோது ஒரு அசரிரீ ஒலித்தது. நீ கிழக்கு பக்கமாக உள்ளே வந்துள்ளாய். உன்மீதுள்ள பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிட்டது.

thiruvidai maruthur lingeswarar temple

நீ வெளியே செல்லும்போது மேற்குப் பக்கமாக சென்று விடு. மீண்டும் கிழக்குப்பக்கமாக சென்றால் பிரம்மஹத்தி தோஷம் உன்னை தொற்றிக்கொள்ளும் என்று சொன்னது. மன்னரும் மேற்குப்பக்கமாக சென்று தன் மீதிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை கழித்துக்கொண்டார். அன்று முதல் இன்றுவரை இந்த கோவிலில் வழிபட வரும் அனைவரும் கிழக்குப்பக்கமாக உள்ளே நுழைந்து மேற்குப்பக்கமாக வெளியேறிவிடுவார்கள். காரணம் கோவிலின் கிழக்குப் புறத்தில் பிரம்மகத்தி சிலை ஒன்று நம்மை பார்த்தபடி இருக்கும்.

thiruvidai maruthur lingeswarar temple

நம் நாட்டில் உள்ள கோயில்களிலேயே இங்கு தான் அதிக அளவில் தீர்த்தங்கள் உள்ளன.மொத்தம் 32 வகையான தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள காருண்யாமிர்த தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தைப்பூசத்தின் போது கொடுக்கப்படும் கல்யாணத் தீர்த்தம் என்ற ஒரு தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த தீர்த்தத்தில் தை பூசம் அன்று நீராடினால் நமக்கு பாவவிமோசனம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள், பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலில் வந்து லிங்கேஸ்வரரின் அருளை பெற்று வருகிறார்கள்.

thiruvidai maruthur lingeswarar temple