ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. நாம் பெரும்பாலும் பெரிய அளவில் பிரசித்தி பெற்ற ஆலயங்களை பற்றி மட்டுமே தெரிந்து வைத்துள்ளோம். காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலுரெட்டிசத்திரம். இந்த பகுதியில் இறங்கி நாம் ஶ்ரீவிஜயராகவப் பெருமாள் திருக்கோவிலை அடையலாம்.
ஸ்தல வரலாறு,
ராவணன் சீதையை சிறை செய்ய அழைத்துச்செல்லும் போது ராவணனுடன் பறவைகளின் அரசனான ஜடாயு போரிட்டது. போரில் தோ ல் வி அடைந்து ம ர ண படுக்கைக்கு சென்றது. அப்போது அந்த பக்கம் வந்த ராமன் லக்ஷ்மண் இந்த ஜடாயுவை கண்டனர். அப்போது ஜடாயு நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும், உங்கள் கைகளால் எனக்கு ஈ ம ச் ச ட ங் கு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதேபோல் என் ஈமச்சடங்கின்போது ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் இங்கே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன உ யி ரை து ற ந் த து.
ஜடாயு வின் ஆசைப்படி அதனுடைய ஈ ம ச் ச ட ங் கை ராமர் முடித்து வைத்தார். இந்த சம்பவம் நடந்த இடம் தான் இந்த திருப்புட்குழி ஆலயம்.
ஆலயத்தின் பெருமைகள்,
இந்த ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர் மரகத வள்ளி அம்மையார். இந்த தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் சக்தி கொண்டவள். குழந்தை வரம் வேண்டி வரும் பெண்கள் இங்கே ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பின்னர் மடத்தில் கொடுக்கப்படும் வறுத்த பயிரை தங்கள் மடியில் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் அந்த பயிர் முளைத்திருந்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்பது கோவில் வரலாறு.
இந்த ஆலயத்தில் பெருமாளுக்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளும் ஜடாயுவிற்கும் கொடுக்கப்படும். ராமரே தன் கையால் ஜடாயுவிற்கு இங்கே ஈ ம ச் ச ட ங் கு கள் செய்ததால் இந்த ஆலயத்தில் ஜடாயுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுபோல அமாவாசைகளில் இந்த ஆலயத்திற்கு வந்து தர்ப்பணம் கொடுத்தால் இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் உறுப்புகள் அசையும் தன்மை கொண்ட கல்குதிரை ஒன்று உள்ளது. உண்மையான குதிரையின் உறுப்புகள் எப்படி அசையுமோ அதைப்போன்றே இந்த கல்குதிரையின் உறுப்புகளும் அசையும். இந்த சிலையை செய்த சிற்பி தன் வாழ்நாளில் அதன் பின்னர் வேறு எந்த சிலையும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து இ ற ந் தா ர். இதனால் இந்த ஆலய திருவிழாவில் அந்த சிற்பியையும் போற்றும் விதமாக ஒரு சில பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
குழந்தை பாக்கியம் வேண்டி வறுத்த பயிரை முளைக்க வைக்கும் அதிசயங்களும், அம்மாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்களும் இங்கு பலன் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் நம்மால் முடிந்த போது இந்த புண்ணிய தலத்தை வழிபட்டு பெருமாளின் அருளை பெறலாம்.