தெய்வீகம்

திருப்பங்களை தரும் திருப்பட்டூர் பிரம்மா. பிறவி பிணிகளை போக்கும் பிரம்மபுரிஸ்வரர்.

Mar 01 2021 10:11:00 AM

நம்முடைய தலையெழுத்தை மாற்றக் கூடிய ஒரு திருத்தலமாக சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சிறு கிராமமான திருப்பட்டூரில் அமைந்துள்ளது. இங்கு ஒரு முறை செல்வதே விதியிருப்பில் மட்டுமே நமக்கு நிகழும். ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லக்கூடிய வரம் கிட்டும் என்பது நிதர்சன உண்மை.

thirupattur-bhrima

                    படைக்கும் தொழிலை உடைய பிரம்மா ,முற்காலத்தில் ஐந்து தலைகளை கொண்டிருந்ததாகவும் மும்மூர்த்திகளில் ஒருவராக இவர் கருதப்பட்டாலும் இவருக்கு கொஞ்சம் கர்வம் ஏற்பட்டதாம். இவரது கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் இவரது ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தார் .அதோடு மட்டுமில்லாமல் படைக்கும்   தொழிலையும் இழக்க கடவாய் என்று சாபமிட்டார். அதிர்ச்சி அடைந்த பிரம்மா தன்னுடைய தவறை உணர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக சிவலிங்கத்தை நாடு முழுவதும்  பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த இவர், திருப்பட்டூரிலும் 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

thirupattur-bhrima

இந்த வழிபாட்டை கண்ட சிவபெருமான் மகிழ்ந்து அவர் முன் தோன்றி சாப விமோசனம் தந்து மீண்டும் படைக்கும் தொழிலை கொடுத்து அருளினார். படைக்கும் தொழிலை செய்வதோடு மட்டுமில்லாமல் உன்னை நாடி வரும் பக்தர்களின் தேவைக்கேற்ப தலையெழுத்தையே மாற்றி அமைப்பாய் என அருளினார்.  இவ்வாறு பிரம்மனால் வழிபட்டு ஈசனிடமிருந்து சாபவிமோசனம் பெற்றதால் இங்குள்ள ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

thirupattur-bhrima

              இங்கு சென்று நம்பிக்கையுடன் நம் ஜாதகத்தை பிரம்மாவின் பாதத்தில் வைத்து வணங்கினால் நம் தலையெழுத்தே மங்களகரமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த தடைகள், பிரச்சினைகள்  இருந்தாலும் இங்கு சென்று மனமுவந்து  வணங்கினால் அனைத்தும் பட்டு போய் விடுமாம். இதனால் தான் இந்த இடத்திற்கு பட்டூர் என்ற பெயர் அமைந்தது. இது மட்டுமில்லாமல் படைக்கும் தொழிலை கொண்ட பிரம்மா புத்திரப்பேறு அருள்வதில் வல்லவராக திகழ்கிறார்.

thirupattur-bhrima

      எனவே குழந்தைப்பேறு  இல்லாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது  அனைவரின் நம்பிக்கை. இக்ககோவிலில் மஞ்சள் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. யாருடைய தலை எழுத்து மாறவேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவர்களே இப்பிரம்மானின் கண்களில் படுவார்கள் என்பது இக்கோவிலின் ஐதீகம் .