ஆன்மீகம்

கடவுள் உண்மையாகவே சக்தி உள்ளவரா? திருப்பதி பெருமாளின் மகிமையே மகிமை தான்!

Jun 08 2021 01:47:00 PM

இந்த உலகில் உள்ள பணக்கார கடவுள்களில் முதல் இடத்தில் இருப்பவர் திருப்பதி வெங்கடாச்சலபதி பெருமாள். கடவுள் நம்பிக்கையே இல்லாத மனிதர்கள் கூட இந்த கோவிலுக்கு சென்று நிறைய பலன்களை பெற்றிருக்கிறார்கள். வெளிநாட்டு மக்கள் கூட நம் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தால் திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

thirupathi perumal parimalakkal

நண்பர் ஒருவர் திருமணம் முடிந்து திருப்பதி கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். திருப்பதி பகவானை வழிபட்ட பின்னர் கோவிலை சுற்றி வரும் வழியில் ஒரு பரிமளக் கல் இருக்கும். அந்த பரிமளக் கல்லில் நம் மனதில் தோன்றும் ஆசையை எழுதி வைத்தால் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். நண்பரும் அந்த பரிமளக் கல்லுக்கு அருகில் சென்று எழுத தொடங்கியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை நிம்மைதியாக இருக்கவேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளை எழுத நினைத்துள்ளார்.

thirupathi perumal parimalakkal

அப்போது கூட்டம் அதிகமானவுடன் அனைவரும் இவரை நகர சொல்லியுள்ளனர். எனவே கடவுளே நான் உங்களை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்று மட்டும் எழுதி வைத்துவிட்டு திரும்பிவிட்டார். என்னடா நம்ம 1008 கனவுகளுடன் பரிமளக் கல்லில் எழுதலாம்ன்னு போனோம், அதுக்குள்ளயும் இப்படி கூட்டம் கூடிடுச்சே என்று நினைத்துள்ளார். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர், நாங்க குடும்பத்துடன் பெருமாள் திருமணம் பார்க்கலாம்னு வந்தோம், எங்க குடும்பத்துல 2 பேர் வரவில்லை, எங்களிடம் 2 டிக்கெட் எக்ஸ்ட்ரா உள்ளது, நீங்களும் எங்களுடன் வந்து பெருமாள் திருமணம் பாருங்கள் என்று அழைத்துள்ளார்.

thirupathi perumal parimalakkal

நண்பர் ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து விட்டாராம். நான்  மீண்டும் பார்க்கணும்னு வேண்டினேன், நீங்க அடுத்த நிமிஷமே எனக்கு வாய்ப்பு கொடுத்துடீங்களே கடவுளே, என்று நினைத்துக்கொண்டு மீண்டும் பெருமாளை தரிசித்து பரிமளக் கல்லில் எழுதி வைத்துவிட்டு வந்தாராம். கடவுளை நம்புபவர்களை அந்த கடவுள் எப்போதும் கைவிடுவதில்லை என்பது இந்த நிகழ்வில் இருந்து தெளிவாகிறது.

thirupathi perumal parimalakkal