தகவல்கள்

திருப்பதி மலையில் பெருமாள் வடிவில் காட்சியளிக்கும் பாறைகள்! தானாக மலையின் மீது உருவான சிலையை பார்த்து அதிசயிக்கும் மக்கள்!

Oct 21 2021 03:42:00 PM

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர கடவுள் என்றால் அவர் நம்ம திருப்பதி வெங்கடாசலபதி மட்டுமே. நம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் தினமும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து பெருமாளின் அருளை பெற்றுச் செல்கிறார்கள். திருப்பதி மலையின் மீது அதிசயமான இடம் ஒன்று உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பெருமாளைப் போன்று மலையில் ஒரு சிலை தானாக உருவாகி உள்ளது.

thirupathi perumal statue fort

2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த பெருமாள் வடிவம் அந்த மலையில் தோன்றவில்லை. 2012ஆம் ஆண்டு தான் இந்த வடிவம் மலையில் உருவானது என்று சொல்கிறார்கள். பெருமாளை தரிசிக்க மொத்தம் 2 வழிகள் உள்ளன. ஒன்னு பேருந்தில் மலைக்கு சென்று தரிசிப்பது, இரண்டாவது அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்று பெருமாளை தரிசிப்பது.

thirupathi perumal statue fort

அப்படி நடந்து செல்லும்போது இரண்டாவது மலைப்பாதையின் வளைவுப் பகுதியில் நின்று பார்த்தால் இந்த பெருமாள் சிலை தெளிவாகத் தெரியும். நடந்து செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் நின்று தானாக உருவாகிய பெருமாளை வணங்கி வழிபட்டுவிட்டு மேற்கொண்டு தங்கள் நடைப் பயணத்தை தொடர்வார்கள்.

thirupathi perumal statue fort

இந்த இடத்திற்கு செல்வதற்கென்று எந்த ஒரு வழிப்பதையும் கிடையாது. மலையில் உள்ள காடுகளுக்குள் சென்று தான் இந்த இடத்தை அடைய முடியும். விசேஷ நாட்களில் இளைஞர்கள் இந்த இடத்திற்கு சென்று தங்கள் உ*டலில் கயிறு கட்டி இந்த பெருமாள் உருவத்திற்கு மாலை போட்டு அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

thirupathi perumal statue fort