தத்வமஸி

திருப்பதி ஆலயத்தில் மட்டும் ஏன் ஆழ்வார்களுக்கு என்று விக்ரமங்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யவில்லை?

Jan 12 2022 05:26:00 PM

ஆழ்வார்கள் எப்போதும் பெருமாளின் மீது அதிக பக்தி கொண்டவர்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் ஆழ்வார்களுக்கு என்று விக்கிரங்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக அதிகமாக ஆழ்வார்கள் பாடிய திருத்தலம் திருப்பதி மட்டும் தான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமங்கள ஆழ்வார் என மொத்தம் பத்து ஆழ்வார்களும் சேர்ந்து 202 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள்.

thirupathi aalvar kovinda perumal raamanujam

ஆனால் அந்த திருப்பதி மலையில் எந்த ஒரு ஆழ்வாரின் திருவுருவமும் நம்மால் பார்க்க முடியாது. இவ்வளவு பக்தியுடன் பணிவிடை செய்த ஆழ்வார்களை ஏன் திருப்பதி மலையில் திருவுருவ சிலை அமைத்து வழிபாடு செய்யவில்லை தெரியுமா?

thirupathi aalvar kovinda perumal raamanujam

திருப்பதி மலையை ஆழ்வார்கள் பூலோக வைகுண்டமாக கருதினார்கள். எனவே அந்த திருப்பதி மலைக்கு செல்ல அஞ்சினார்கள். ஏழு மலைகளையும் பகவானாக எண்ணினார்கள். இந்த விஷயத்தை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீ ராமானுஜர் பின்னாளில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆழ்வார்களின் விக்ரமங்களை வைத்து பிரதிஷ்டை செய்தார். இதன் காரணமாகத்தான் திருப்பதியில் ஆழ்வார்களின் திருவுருவங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை.

thirupathi aalvar kovinda perumal raamanujam