தெய்வீகம்

#thiruchendur: முருகனின் பன்னிரு கரங்கள் கொண்ட திருச்செந்தூர் முருகர் கோவில் பிரசாதம்! முருகனே அருளியது! புராணம் கூறும் வரலாறு!

May 26 2020 11:03:00 PM

திருச்செந்தூர் முருகர் கோவிலில் காலம் காலமாக பன்னீர்  இலை விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த விபூதி, மகத்துவம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. பன்னிரு  நரம்புகள் கொண்ட பன்னீர்  இலை கொண்டு இந்த விபூதி தயாரிக்கப்படுகிறது. ஏன் இந்த கோவிலில் மட்டும் இப்படி ஒரு நம்பிக்கை என ஆராய்ந்த போது. முப்பத்து முக்கோடி தேவர்களும்  திருச்செந்தூரில் பன்னீர் விருட்சங்களாக(மரங்களாக) இருப்பதாக நம்பப்படுகிறது. அதனாலே இப்படி ஒரு பிரசாதம். 

thiruchendur-murugan paneer-ilai-vibhuti

விஸ்வாமித்திரர் காசநோயால் அவதிப்பட்ட போது அந்த முருகப்பெருமானோ தனது பன்னிரு கரத்தால் பன்னீர்  இலை விபூதியை பிரசாதமாக வழங்கி, நோய் குணமாகியதாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இந்த இலையில் உள்ள நரம்புகள் முருக பெருமானின் பன்னிரு கரங்கள் போலவே இருக்கும். இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருகனது வேல் போலவே அமைப்பில் ஒத்திருக்கும்.  

thiruchendur-murugan paneer-ilai-vibhuti

ஆதிசங்கரர் பாடிய சுப்ரமணிய புஜங்கத்தில் பன்னீர்  இலை விபூதி கொண்டு பல வியாதிகள் நீங்கும் என கூறப்பட்டுள்ளது. வலிப்பு, நீரிழிவு, குஷ்டம்,குன்மம்,போன்ற கொடுமையான வியாதிகளும் உன்னுடைய விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் காணாமல் போகுமே? என பாடியுள்ளார்.

thiruchendur-murugan paneer-ilai-vibhuti

கோவிலில் பூஜை செய்பவர்களை அணுகி குறிப்பிட்ட தொகையை வழங்கினால் வருடா வருடம் வீட்டிற்கே இந்த  பன்னீர்  இலை விபூதி பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த விபூதியில் சாந்த சக்தி உள்ளதால் மனதிற்கு அமைதியை கொடுப்பதாக சித்த வைத்தியம் கூறுகிறது. இந்த விபூதியை பக்தர்கள் வீட்டில் பத்திரமாக வைத்து கொண்டு,  நோய்வாய் படும்போது இதனை இட்டு கொள்கின்றனர்.