தெய்வீகம்

தீபதூப ஆராதனை காட்டும்போது கடைபிடிக்க வேண்டியவை! தீபதூபம் காட்டாமல் விளக்கு மட்டும் ஏற்றி வழிபட கூடாதா?

Jan 09 2022 02:12:00 PM

கடவுளை வணங்குவது என்றாலே தீப தூப ஆராதனை காட்டி தான் வணங்க வேண்டும் என்கிறார்கள். அது கோவிலாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையாக இருந்தாலும் சரி. சில வீடுகளில் தீபம் மட்டும் தான் ஏற்றுவார்கள். தீப, தூப ஆராதனை செய்ய மாட்டார்கள். சில வீடுகளில் விளக்கு ஏற்றி, தீப ஆராதனை மட்டும் செய்யவார்கள். தூபம் காட்ட மாட்டார்கள். ஏன்? கடவுள் தான் தூணிலும் துரும்பிலும் உள்ளாரே? அப்படி இருக்க தீப தூப ஆராதனை அவசியம் தானா? ஏழ்மையான வீடுகளில் தீப தூப ஆராதனை காட்டவே மாதம் ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டுமே? அப்படி இருக்க தீப தூப ஆராதனை அவசியம்தானா? 

dhoopa-deepa dhoopa-deepa-naivedyam

கட்டாயம் அவசியம். விளக்கு ஏற்றும் போது, எப்படி இருள் விலகி வெளிச்சம் கிடைக்கிறது? அதுபோலவே வீட்டில் உள்ள குழப்பம் நீங்கி, மனதில் தெளிவு பிறக்கும். அதோடு வீட்டின் வசதிக்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றலாம். இரு அகல்விளக்கு ஏற்றினால் கூட போதும். இருப்பதிலே சிறியதாக இருக்கும் அகல்விளக்கை வாங்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள் போதும். விளக்கு ஏற்றிய உடனே அதில் லட்சுமி தேவி வாசம் செய்வார். 

dhoopa-deepa dhoopa-deepa-naivedyam

அடுத்து கடவுளுக்கு பூ வைத்து வணங்கிவிட்டு, கண்டிப்பாக தூப ஆராதனை காட்ட வேண்டும். வீட்டில் உள்ள மூலை முடுக்கெல்லாம் தூபம் காட்ட வேண்டும். கம்யூட்டர் சம்பிராணியாக இருந்தாலும் சரி, இல்லை பொடி சாம்பிராணியாக இருந்தாலும் சரி. வீடு முழுக்க அதை காட்டுங்கள்.

dhoopa-deepa dhoopa-deepa-naivedyam

ஏனெனில் வீட்டில் எங்கெல்லாம் துர்மணம் வீசுகிறதோ அங்கெல்லாம் துர் தேவதைகள் குடி இருப்பார்கள் என்கிறது சாஸ்திரம். அதனை போக்க தான் வீடு முழுக்க சாம்பிராணி போட சொல்கிறார்கள். நறுமணம் கமழும் இடங்களில் லட்சுமி வாசம் செய்வார் என நம்பப்படுகிறது.

dhoopa-deepa dhoopa-deepa-naivedyam

அதனாலே தீப தூப ஆராதனை காட்ட சொல்கிறார்கள். தூபம் காட்டியாச்சு. அடுத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். தீபத்தில் தான் முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். அந்த ஜோதியை பூஜை அறைக்கு காட்டிவிட்டு நாமும் வணங்கும்போது, முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்று வளமுடன் அந்த நாளை துவங்குகிறோம் என்று அர்த்தம். முடிந்தவரை தினமும் சின்ன அகல்விளக்கேற்றி, ஒரு கற்பூரம் காட்டி, சிறிதள்வு சாம்பிராணி போட்டு தூபம் காட்டுங்கள். நாளிற்கு நாள் வீட்டிலும் வீட்டில் உள்ளோரது மனதிலும் மாற்றம் பிறக்கும் முன்னேற்றம் ஏற்படும்.