தகவல்கள்

அம்மா வீட்டில் இருந்து முருங்கை கீரையை எடுத்துவர கூடாதாம்! ஏன்? மீறி எடுத்து வந்தால்? லட்சுமி தேவி வாசம் வாசலை தாண்ட கூடாது!

Nov 23 2021 11:32:00 PM

அம்மா வீட்டில் இருந்து எடுத்துவர கூடாத சில பொருட்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி என்னவெல்லாம் எடுத்துவர கூடாது என்பது குறித்த முழு பட்டியலை பற்றித்தான் இந்த பதிவு. பொதுவாகவே அம்மா வீட்டில் இருந்து கொடுத்துவிடும் சீதனத்தில் எண்ணெய், கறிவேப்பிலை, அரப்பு, சீகைகாய், முறம், துடைப்பம், நெய், பயன்படுத்திய சாமி போட்டோ, விக்ரகம், பயன்படுத்திய பூஜை அறை பொருட்கள், கீரை வகைகள், குறிப்பாக முருங்கை கீரை, வெ ட்டும்படி அல்லது குத்தும்படி உள்ள ஆ யுதம் அதாவது அரிவாள்மனை, கத்தி, ஊசி, கத்தரிக்கோல், அரிவாள் என சிலவற்றை கண்டிப்பாக எடுத்துவர கூடாது. முக்கியமாக ஏற்றிய விளக்கை எடுத்துவர கூடாது. புது விளக்கு, பயன்படுத்தாத விளக்கு என்றால் தாராளமாக எடுத்து வரலாம். 

aishwaryam mahalakshmi

முக்கியமாக உப்பு, புளி, சீகைகாய் மூன்றையும் அம்மா வீட்டில் இருந்து எடுத்துவரவே கூடாது. அடுத்து உணவு பொருள்களை பொறுத்தவரையில் கசப்பான காய்கறியான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை எடுத்துவர கூடாது. அப்பா எண்ணெய் வியாபாரம் செய்கிறார் ஊருக்கே எண்ணெய் கொடுக்கிறோம். எங்க வீட்டில் இருந்து நான் எண்ணெய் எடுத்துவர கூடாதா? என சிலர் கேள்வி எழுப்பதுவதுண்டு. அதுவும் முற்றிலும் கூடாது. 

aishwaryam mahalakshmi

அம்மா வீட்டில் முருங்கை மரம் உள்ளது ஊருக்கே எங்க வீட்டில் இருந்து தான் முருங்கை கீரை போகிறது. நான் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாதா என்றால், கண்டிப்பாக மகள் அம்மா வீட்டில் இருந்து இது போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது. வேண்டுமானால் காசு கொடுத்துவிட்டு அந்நியர் போல வாங்கி கொள்ளலாம். எண்ணெய், சீகைக்காய், உப்பு இவற்றை காசு கொடுத்து கூட அம்மா வீட்டில் இருந்து எடுத்து வர கூடாது. 

aishwaryam mahalakshmi

சிலர் பயணத்தின் போது சீகைக்காய், எண்ணெய் போன்றவற்றை எடுத்து செல்வார்கள். ஏனெனில் வெளிநாடுகளில் வசிப்போருக்கு இவை கிடைப்பது அரிது அல்லவா? ஆனால் பயணத்தின் போது இவற்றை எடுத்து செல்வது, எங்கிருந்து எடுத்து செல்கிறார்களோ அந்த வீட்டிற்கு நல்லது அல்ல.