தத்வமஸி

முக்தி அடைய காசிக்கு தான் செல்லவேண்டுமா? நம் தமிழகத்திலேயே காசிக்கு நிகரான ஆலயம் உள்ளது தெரியுமா?

Feb 09 2021 12:06:00 PM

வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். காசியில் இ ற ந் தா ல் தான் முக்தி அடைவார்கள் என்று சொல்வதுண்டு. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இணையாக நமது தமிழகத்தில் உள்ள கோவில் தான் தென்காசி விஸ்வநாதர் ஆலயம். காசியில் இ ற ந் தா ல் தான் முக்தி. ஆனால் இந்த தென்காசியில் பிறந்தாலும் முக்தி, தென்காசியில் இ ற ந் தா லு ம் முக்தி. அந்த அளவுக்கு சக்திகளை கொண்டது தான் இந்த தென்காசி ஆலயம்.

thenkasi viswanathar temple special

வடக்கே உள்ள காசியை போன்று அனைத்து சிறப்புகளையும் இந்த திருத்தலம் கொண்டுள்ளதால் இது தென்காசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை பராக்கிரம மன்னர் தென்காசியில் காசி விஸ்வநாதருக்காக நிறுவினார்.

thenkasi viswanathar temple special

ஸ்தல வரலாறு,
பராக்கிரம மன்னர் காசி விஸ்வநாதரை நினைத்து அனுதினமும் வேண்டி வந்தார். இவர் விந்தன் கோட்டை என்ற பகுதியில் மன்னராக ஆட்சி செய்துவந்தார். இவர் அனுதினமும் சிவனின் புகழை பாடி, துதித்து வந்தார். இவர் ஒரு முறை தன் மனைவியை சிவபெருமான் தலத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் சிவபெருமானின் லிங்கம் ஒன்றினை வாங்கிவந்தார். திரும்பி வரும் வேளையில் மன்னரின் மனைவி மா த வி டா ய் ஆகிவிட்டாள்.

thenkasi viswanathar temple special

பின்னர் அங்கே இருந்த நந்தவனத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்படும்போது மன்னரால் அந்த லிங்கத்தை அங்கிருந்து நகற்ற முடியவில்லை. அப்போது அவருக்கு ஒரு அசரிரி ஒலித்தது. எனக்கு இங்கேயே ஒரு  கோவில் கட்டு என்று கூறியது. உடனே மன்னர் அங்கே ஒரு கோவில் காட்டினார். சிவனுக்காக அவர் அங்கே கோவில் கட்டியதால் அந்த இடம் சிவகாசி என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.

thenkasi viswanathar temple special

பின்னர் நாடு திரும்பிய மன்னர் காசி விஸ்வநாதருக்காக ஒரு மிகப்பெரிய ஆலயம் கட்ட வேண்டும் என்று எண்ணினார். அப்போது அவருடைய கனவில் சிவன் தோன்றி உன்னுடைய அரண்மனையில் உள்ள கட்டெறும்புகள் ஒரு இடத்தில் சென்று நிற்கும். அங்கே என்னுடைய லிங்கம்  இருக்கும்.அங்கே நீ எனக்காக ஒரு கோவில் கட்டு என்று கூறினார்.

thenkasi viswanathar temple special

அடுத்த நாள் சிவன் கனவில் கூறியதைப்போலவே மன்னர் அரண்மனையில் இருந்த கட்டெறும்புகள் நகர்ந்து சென்று நதிக்கரைக்கு அருகில் நின்றன. அங்கே பிரம்மாண்டமான சிவலிங்கம் இருந்தது. அதை பார்த்து மகிழ்ந்த மன்னர் அங்கே ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தை கட்டினார். அந்த ஆலயம் தான் இந்த தென்காசி விஸ்வநாதர் ஆலயம் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.

thenkasi viswanathar temple special

நம் வாழ்நாளில் நாம் இ ற ப் ப த ற் கு முன்பு ஒருமுறையாவது இந்த தென்காசி விஸ்வநாதரை சென்று வழிபட்டால் நாம் முக்தி அடையலாம் என்று ஆன்மீக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

thenkasi viswanathar temple special