எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்பட வில்லை. ஆனால் நவீன உலகத்தில் நிறைய குடும்பங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வருகின்றனர். என்னதான் நம் நாட்டில் ம ரு த் து வ ம் அதீத வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ம ரு த் து வ ர் களால் கூட சரி செய்ய முடிவதில்லை.
அந்த மாதிரி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அள்ளித் தருபவர் தான் கருக்காத்த காளியம்மன். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருக்கருக்காவூர். இங்கே அம்பாள் வீற்றிருக்கிறார். இந்த கோவிலின் இயற் பெயர் முல்லை வன நாதர் ஆலயம்.ஆனால் இங்கே இந்த அம்மன் தான் பிரசித்தி பெற்றவர். இங்கே வீற்றிருக்கும் அம்மனின் பெயர் கற்பரக்ஷாம்பிகை அம்மன். கருவை காத்த அம்மன் குடி கொண்டுள்ளதால் இந்த ஊர் திருக்கருக்காவூர் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு,
முன்னொரு காலத்தில் இரு சக்தி வாய்ந்த முனிவர்கள் இந்த ஆலயத்தில் தவம் செய்துவந்தனர். அவர்களுக்கு கணவன் மனைவி இருவர் தொண்டு செய்துவந்தனர். என்னதான் அவர்கள் கோவில் பணிகளில் ஈடுபட்டுவந்தாலும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்து வந்துள்ளது. ஒரு நாள் அவர்கள் அந்த முனிவர்களிடம் தங்கள் குறையை கூறினர். முனிவர்களும் இந்த கோவிலில் உள்ள அம்மனை வழிபடுங்கள், உங்கள் குறை கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று கூறினர். அதுபோலவே சில நாட்களிலேயே அந்த பெண் கருவுற்றாள். மிகுந்த சோர்வில் அந்த பெண் படுத்திருக்கும் போது ஒரு முனிவர் வந்து அந்த பெண்ணிடம் உணவு கேட்டார்.
அந்த பெண் சோர்வில் இருந்ததால் உணவு கொண்டுவர தாமதமானது. உடனே அந்த முனிவர் கோவத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள கரு சி தை ந் து விடும் என்று சா ப ம் விட்டுவிட்டு சென்றார். அது போலவே அந்த பெண்ணின் க ர் ப் ப ம் க லை ந் த து. உடனே அந்த பெண் அம்மனிடம் சென்று நடந்ததை கூறினார். உடனே அந்த அம்மன் அந்த கருவை ஒரு குடத்தில் வைத்து பாதுகாத்து குழந்தை உருவான பின்னர் அந்த தம்பதிக்கு குழந்தையை வழங்கினார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் எங்களைப்போல இந்த ஆலயத்துக்கு வரும் அனைத்து தம்பதியினருக்கும் குழந்தை வரம் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அன்று முதல் இன்று வரை அம்மன் அந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் குறைகளை நீக்கி குழந்தை வரம் அள்ளித் தருகிறார்.
அம்மனை வழிபடும் முறை,
இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபடும்போது அம்மன் வாசலில் நெய்யால் கோலம் போட வேண்டும். பின்னர் நெய்யை அம்மன் அருகில் வைத்து அபிஷேகம் செய்து நம் வீட்டுக்கு எடுத்துவரவேண்டும். இந்த நெய்யை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது கோவில் ஐதீகம். அதுபோல சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த கோவிலில் வழங்கப்படும் விளக்கெண்ணெயை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் சுகப்பிரசவமும் உண்டாகிறது.
அம்மனுக்கு பக்தர்கள் செய்யும் நன்றிக் கடன்,
இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் சுகப்பிரசவம் தான் உண்டாகுமாம். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவள் தான் இந்த கருக்காத்த காளியம்மன். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அடிக்கடி க ரு ச் சி தை வு ஏற்படுபவர்கள், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்புபவர்கள், பிரிந்த கணவன் மனைவி சேர வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கே வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
தங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பின் இங்கு தங்கள் குழந்தைகளை கூட்டிவந்து எடைக்கு எடை பணம், நெய், பழங்கள் என்று தங்களால் முடிந்த வேண்டுதல்களை செய்கிறார்கள். கோவிலில் குழந்தைகளுக்கான தொட்டி உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் இந்த தொட்டியில் போட்டு ஆட்டுவதாக சில பெற்றோர் வேண்டிக்கொள்கின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை கோவிலின் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிடுவதாக வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்த பின்னர் இங்கு வந்து சில நாட்கள் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு பின்னர் மீண்டும் அழைத்துச் செல்வார்கள்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சில ம ரு த் து வ ம னை களில் கூட நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றுவந்து பாருங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் டா க் ட ர் களே பரிந்துரைக்கிறார்கள். இத்தனை சக்திகள் நிறைந்த அம்மனை நாமும் வழிபடுவோம், நம்மை சுற்றி குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கும் இந்த செய்தியை பரப்பி அவர்கள் இல்லறம் இனிமை அடைய உதவுவோம்.