தத்வமஸி

தாலிக்கு தங்கம் வேண்டாம். சாதாரண மஞ்சளே போதும். தலிக்கயிறும் மஞ்சளின் மகத்துவமும்.

Feb 05 2021 08:31:00 AM

தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் தாலி செண்டிமெண்ட் மிகவும் அரிதாகிவிட்டது. அதுவும் அதை எப்படி பராமரிப்பது என்பது கூட youtube ல் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறதென்றால், அதற்காக நமது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் வருத்தப்படவேண்டும். ஏனென்றால், எவ்வளவோ பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளுக்கு பிறப்பிடமாக இருப்பது நமது தமிழ் சமுதாயம். அதன் அடிப்படை சடங்குகளில் ஒன்று தான் இந்த திருமண சடங்குகள். திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது "தாலி".

thaali-manjal

"தாலி தான் திருமணமான பெண்களுக்கு வேலி" அதை தங்கத்தில் அணிவதை விட கயிற்றில் அணிவது தான் அதிகம் மகத்துவமானது. இன்னும் நமக்கு முந்தய தலைமுறை சுமங்கலிப்பெண்களை காண நேரிட்டால், அவர்கள் தங்கத்தை விட, கயிற்றால் ஆன தாலிகளை தான் அணிந்திருப்பார்கள்.

thaali-manjal

சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், தாலிக்கயிறு கேது பகவானின் அம்சமாகும். அவர்  பாவக்கிரகமாகவும், பொல்லாத கிரகமாகவும் இருப்பதால் மிகுந்த பயபக்த்தியுடன் அவரை வழிபடவேண்டும். ஆனால் குரு பகவான் பார்வை அணைத்து சங்கடங்களையும் நீக்கி சுகத்தை வழங்கக்கூடியது. எனவே தான் தாலிக்கயிற்றில் அடிக்கடி மஞ்சள் பூசுவார்கள், அல்லது மஞ்சள் கயிறு அணிவார்கள். காரணம் தாலிக்கு தொடர்ந்து மஞ்சள் பூசுவது அதன் பலத்தை அதிகரிக்கிறது. அதாவது குருபகவானின் பார்வை எப்போதும் உங்கள் மாங்கல்யத்தை பாதுகாப்பதால் உங்கள் கணவருக்கு வரவிருக்கும் சங்கடங்களை இது தவிர்க்க மிகவும் உதவும்.

thaali-manjal

ஆனால் இன்று பெண்கள் அணியும் தங்கத்தால் ஆன தாலிகள், அவர்களுக்கு பராமரிக்க எளிதாகவும், அவர்களது பகட்டை வெளிக்காட்டவும் உதவுகிறது. நன்கு புரிந்துகொள்ளுங்கள் பெண்களே, தாலி என்பது ஒரு நகை கிடையாது. உங்களையும் உங்கள் கணவரையும் பாதுகாக்கும் வேலி. எனவே அதை முறையாக பராமரியுங்கள்.