தெய்வீகம்

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்ல காரணம் என்ன? இவ்வளவு அதிசயங்கள் நிறைந்ததா கோவில்கள்?

Mar 03 2021 03:42:00 PM

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறி உள்ளனர். வெறும் ஆன்மீக ரீதியாக மட்டும் கோவில்கள் கட்டப்படவில்லை. கோவில்களில் சில அறிவியல் ரீதியான விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. முன்னொரு காலங்களில் ஒரு ஊரில் உள்ள கோவில் தான் மற்ற அனைத்து வீடுகளை விட உயரத்தில் பெரியதாக இருக்கும்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

கோவில்களின் உச்சியில் கோவில் கோபுரங்களில் கலசங்கள் அமைந்திருக்கும். அந்த கலசங்கள் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற ஐம்பொன்களால் செய்யப்பட்டிருக்கும். அந்த கலசங்களில் தானியங்கள் நிரப்பப்பட்டிருக்கும். நெல், வரகு, உப்பு, கேழ்வரகு, கோதுமை, திணை, மக்காச்சோளம் போன்ற தானியங்கள் நிரப்பப்பட்டிருக்கும்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

குறிப்பாக வரகு அதிக அளவில் நிரப்பப்பட்டிருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் வரகு மின்னலை ஈர்க்கும் சக்தி கொண்டது. மின்னல் வரும்போது வரகு அதனை ஈர்த்துக்கொண்டு கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் மக்களை காப்பாற்றும்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

அதே போல கோவில்கள் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். நாம் நினைக்கலாம் கோவில் பழமை அடைந்துவிட்டது, அதன் காரணமாகத்தான் கும்பாபிஷேகங்கள் செய்கிறார்கள் என்று. அப்படி ஒன்றும் கிடையாது. இந்த தானியங்களின் சக்தி வெறும் 12 வருடங்கள் தான். அதற்காகத் தான் 12 வருடங்களுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்கிறார்கள்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

இன்றைய காலகட்டங்களில் மழை பெய்தால் அதிக பட்சமாக 3 நாளைக்கு பெய்யும். ஆனால் அந்த காலகட்டத்தில் மழை மூன்று மாதங்கள் விடாமல் பெய்யும். அப்படி பெய்தால் ஊரில் உள்ள பயிர்கள் அனைத்தும் நா ச மா கி விடும். அப்படி ஆகும் பட்சத்தில் மக்கள் இந்த கோவிலின் கலசங்களில் உள்ள தானியங்களை எடுத்து விவசாயம் செய்ய பயன்படுத்திவந்தனர்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

ஒரு இடத்தில் உள்ள மிகப்பெரிய உயரமான பகுதியையே இடி முதலில் தாக்கும். கோவில் கோபுரங்கள் மிக உயரமாக உள்ளதால் அந்த கலசங்கள் இடியை தன்னுள் இறக்கிக் கொள்கின்றன. இதனால் தான் கோவில் உள்ள பகுதிகளில் இடி இறங்குவதில்லை. ஒரு கோவில் கோபுர கலசம் 50 அடி உயரத்தில் இருந்தால் அது 75000 சதுர அடி உள்ள பகுதிகளை இடி, மின்னல் தாக்குதலில் இருந்து காப்பற்றுமாம். நிறைய கோவில்கள் நான்கு வழி கோபுர கலசங்களை கொண்டுள்ளது. அப்படி என்றால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவை இடி, மின்னல் தாக்குதலில் இருந்து கோவில் கோபுரங்கள் காப்பாற்றிவருகின்றன.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

ஒன்றும் தெரியாதவர்கள் என்று நம் முன்னோர்களை ஒரு போதும் நினைத்துவிடாதீர்கள். நாகரீக வளர்ச்சியே இல்லாத அந்த காலகட்டத்தில் இவ்வளவு நேர்த்தியாக அனைத்து விஷயங்களையும் நமக்காக செய்துவைத்துள்ளனர்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam

மக்கள் நாகரிகம் என்ற பெயரில் மாடி மீது மாடி வைத்து பல அடுக்கு மாடிக் குடியிருப்புகளை கட்டுகிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் கோவில் கலசங்களின் உயரத்தை விட பெரிய அளவில் வீடு காட்டாதீர்கள். இதன் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

kovil kopuram kalasam kumbabisegam thaanyam