ஆன்மீகம்

ஆண்கள் சட்டை அணியாமல் சென்றால் மட்டுமே, ஒரு சில கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது ஏன்? இதெல்லாம் தெரிந்தால் நுழையும் போதே கழற்றி விடுவோம்!

Sep 30 2021 07:07:00 PM

தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ள சில கோவில்களில் ஈரமான ஆடையுடன் அங்கப்பிரதட்சணம் செய்யும் வழிபாடு உள்ளது. ராமேஸ்வரத்தில் கோவிலை சுற்றியுள்ள தீர்த்த கிணறுகளில் குளித்து, ஈர ஆடையுடன் கோவிலை வலம் வந்து வழிபடும் படி உள்ளது. சென்னையை அடுத்துள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

temple shirt tiruchendure

ஆண் ,பெண் இருவரும் உடலில் துணி இல்லாமல் வேப்பிலையை மட்டுமே ஆடையாக அணிந்தபடி கோவிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் இன்னும் உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் ஆண்கள் சட்டையை கழற்றிவிட்டு தரிசனம் செய்ய கோவில் உள்ளே செல்ல வேண்டும். இதெல்லாம் எதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால், கோவிலில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சக்தியை, நம்முடைய உடல் பெருமளவு உள் வாங்குவதற்காகவே அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

temple shirt tiruchendure

உடலை முழுவதுமாக மறைத்தபடி துணி இருந்தால் கோவிலில் உள்ள சக்தியை முழுவதுமாக உடலால் கிரகிக்க முடியாது. அதே போல அந்தக்காலத்தில் ஆண்கள் உடை என்பது, வேட்டி மற்றும் மேல்துண்டு மட்டுமே. கடவுளின் சந்திதியில் மேல்துண்டை, மரியாதை நிமித்தமாக இடுப்பில் கட்டிக்கொண்டனர். இதையே வழக்கமாக்கிவிட்டனர். கேரளத்தினருக்கும், சில தென்கோடித் தமிழகத்தினருக்கும் மேல்துண்டு இல்லாமல் இறை வழிபாடு என்பது சில இடங்களில் நிலைக்கக் காரணம் இதனால் தான். 

temple shirt tiruchendure

அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ரோஷமா இருப்பாங்க. அதற்கு காரணம், சந்திரனின் ஈர்ப்பு சக்தி எனப்படுகிறது. அதே மாதிரி பிரபஞ்ச சக்தியும் நம் உடல் மீது பாய்கின்றது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள மூலஸ்தானத்தில் சக்தி அதிகமாக இருக்கும். அது நம் மீது பட்டு நமக்கு புத்துணர்ச்சியைத்தரும். அதற்கு ஏற்றவாறு சட்டை அணியாமல் சென்றால், அதிக சக்தியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பதால் சில கோவில்களுக்குள் சட்டை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.