நம் வீடுகளில் பொதுவாக காலை எழுந்தவுடன் நம் தாத்தா, பாட்டி அவசர அவசரமாக குளித்துவிட்டு சூரியனை பார்த்து கும்பிடுவதை பார்த்திருப்போம். என்னடா சுட்டெரிக்கிற சூரியனை கும்பிடுறாங்களேன்னு நம்ம நினைத்திருப்போம். அண்ட சராசரங்களுக்கும் ஒளியைத் தரும் சூரியனும் ஒரு கடவுள் தான்.
நம் உலகில் சூரிய ஒளி மட்டும் இல்லையென்றால் எந்த வித பருவநிலை மாற்றங்களும் இங்கே நிகழாது. உலகம் எப்போதும் இருண்டே இருக்கும். நாம் சாப்பிட உணவு, குடிக்க தண்ணீர் என ஏதும் நமக்கு கிடைக்காது. அப்பேற்பட்ட நம் வாழ்விற்கு மிகவும் முக்கியமான சூரிய பகவானை வழிபடுவது நாம் ஆயிரம் கோவிலுக்கு செல்லும் நன்மைகளை நமக்கு அளிக்கும்.
எதற்காக நாம் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்கிறோம் தெரியுமா? அந்த காலை மற்றும் மாலை வேளைகளில் மிதமான சூரிய ஒளி இருக்கும். அந்த சூரிய ஒளி நம் மீது படும்போது நமக்கு புத்துணர்ச்சி உண்டாகும். அன்றைய நாள் இனிமையாக அமையும்.
சூரிய பகவானை எப்படி வழிபடுவது?
அதிகாலை நாம் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் சூரியநை நோக்கி "ஓம் சூரிய நாராயணாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே, அந்த செம்பு நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் மார்பகத்திற்கு நேராக இருகரம் கூப்பி உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு சூரிய பகவானை வேண்ட வேண்டும். நீங்கள் ஆண்களாக இருந்தால் உங்கள் தலைக்கு மேல் இருகரம் கூப்பி இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு வணங்க வேண்டும். பின்னர் நீங்கள் நிற்கும் இடத்திலேயே மூன்று முறை சுற்றி விட்டு வழிபடுதலை நிறுத்திக்கொள்ளலாம்.
சூரிய பகவானை வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்,
நீங்கள் இப்படி தினமும் வழிபடுவதால் உங்கள் மனதிலும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மனதிலும் உள்ள தீ ய எண்ணங்கள் மறைந்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புத்துணர்ச்சி உண்டாகி உங்கள் வாழ்நாள் அதிகரிக்கும். நோ ய் கள், து ஷ் ட சக்திகள் பாதிப்பு நீங்கி உங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மென்மேலும் பெருகும்.