ஆன்மீகம்

#Akshayapatra: அக்ஷய பாத்திரம் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா? அப்படியென்றால் பிரபல கோவிலில் பராமரிக்கப்படும் அக்ஷய பாத்திரம்?

May 17 2020 11:47:00 AM

ஜோதிகா மற்றும் ரேவதி நடித்த 'ஜாக்பாட்' படத்தில், இந்த காலத்தில் அக்ஷய பாத்திரம் என்ற ஒன்று இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என காட்டியிருப்பார்கள். பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாத உணவு, தங்கம், வைரம் என பெருகி கொண்டே இருக்கும். உண்மையில் அக்ஷய பாத்திரம் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா? பொய் எனில் பிரபல முருகர் கோவிலில் உள்ள அக்ஷய பாத்திரம் உள்ளதே அது உண்மையா? இப்படி பல சந்தேகங்கள் எழ, இது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

Akshaya-Patra jothika revathi manimegalai

மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது அவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யவே தருமனுக்கு சூரிய பகவான் இதை அளித்ததாக கூறப்படுகிறது. மஹாபாரதம் உண்மையெனில் அதில் குறிப்பிட்டுள்ள அக்ஷய பாத்திரமும் உண்மையாகத்தானே இருக்கும்? 

Akshaya-Patra jothika revathi manimegalai

அடுத்து மணிமேகலை காப்பியத்தில், மாதவி மகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அவளுக்கு காட்சி அளித்து, மணிமேகலைக்கு முற்பிறப்பை உணர்த்திச்சென்றதோடு அமுதசுரபி ஒன்றையும் கிடைக்கப்பெறுமாறு வரம் அளிக்கிறார். அதன்படி முன்னொரு பிறவியில் ஆபுத்திரனிடம் இருந்த அமுத சுரபி எனும் அக்ஷய பாத்திரம் கிடைக்கபெறுகிறாள். பின்னர் அதனை கொண்டு முதன்முதலாக 
பத்தினிப் பெண்டிரிடம் பிச்சை பெறும் போது, அது உணவு குன்றா அமுத சுரபியாக மாறிவிடுகிறது. பின்னர் மணிமேகலை, மக்களின் பசி எனும் கொடிய நோயை தீர்க்க வாழ்வை அர்பணிக்கிறாள். மணிமேகலை காப்பியம் உண்மையெனில் அக்ஷய பாத்திரம் இருந்ததும் உண்மைதானே? காலப்போக்கில் காணாமல் போயிருக்கலாம் அல்லது கடவுளால் திருப்ப பெற்றிருக்கப்பட்டிருக்கலாம்.

Akshaya-Patra jothika revathi manimegalai

அப்படியானல் பிரபல முருகன் கோவிலில் உள்ள பாத்திரம் அக்ஷய பாத்திரம் இல்லையா? உண்மையான அமுத சுரபியாக இருந்தால் சும்மாவா வைத்திருக்கும் அரசு என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.