ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு கோபுரம் மட்டும் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்நேரம் கோவிலே இருந்திருக்காது! பிரம்மிக்க வைக்கும் தமிழச்சியின் வரலாறு!

Oct 01 2021 06:31:00 PM

எங்க உறவினர் ஒருவர் திருச்சியில், அரசு வேலையில் இருக்காங்க. அவங்க வீட்டுக்கு போன கையோடு, ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு ஒரு விசிட் அடித்தோம். நெடுநாட்களுக்கு பிறகு, மனசுக்கு நிறைவாக இருந்தது. ஆனால் கிளம்பி வரும் போது ஒரே குழப்பம். எல்லாக் கோபுரங்களும் வண்ணமயமாக ஜொலிக்க, ஒரேயொரு கோபுரம் மட்டும் வெள்ளை நிறத்தில் இருந்தது. கோவிலுக்கு வெளியே பூக்கடை வைத்திருந்த ஒரு அம்மாவிடம் காரணம் கேட்டேன். இதற்குப் பின்னால், ஒரு வீரத்தமிழச்சியின் கதை அல்ல, காவியமே மறைந்துள்ளது. தொன்று தொட்டே நம் பெண்கள் வீரத்திற்கும், ஈரத்திற்கும் பெயர் போனவர்கள். தங்கள் நாட்டிற்கு ஒன்றென்றால், தன் உயிரையும் இழக்க தயங்கமாட்டார்கள் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டேன்.

temple sri-rangam trichy

சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது.மக்கள் உயிர் பிழைத்தால் போதுமென பயந்து நடுங்கிக்கொண்டிருந்தனர். அதே நேரத்தில், ஸ்ரீரங்கம் கோவிலும் அபாய கட்டத்தில் இருந்தது. ஏராளமான கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கோவிலில் குவிந்து கிடந்த செல்வங்களைப்பார்த்து, இன்னமும் புதையல் இருக்குமென்ற ஆசையில், பொதுமக்களை துன்பப்படுத்தி அது குறித்த இரகசியங்களை கேட்டு சித்திரவதை செய்தனர் அலாவுதீன் கில்ஜியின் படையினர்.

temple sri-rangam trichy

ஆத்திரம் பொறுக்காமல் கண்ணில் பட்ட அனைவரையும் வெ ட்டி சாய்த்தது. ஏராளமான பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். அப்போது வெள்ளையம்மாள் என்ற ஒரு தேவதாசி கோவிலில் அரங்கனுக்கு பணிவிடை செய்துவந்தாள். முகலாயப்படையின் அட்டூழியத்தைப் பார்த்த வெள்ளையம்மாள், முகலாய தளபதியை பார்த்து, அவருடைய ஆசைக்கு இணங்குவதாக கூறினாள். உனக்கு என்ன வேண்டும் என தளபதியுடன் வெள்ளையம்மாள் கேட்டதற்கு, நிறைய தங்கம் புதையல் வேண்டும் என்று கூறியுள்ளார். தளபதியை தன்னுடன் அழைத்துக்கொண்டு வெள்ளை கோபுரத்தை காண்பிக்க அதன் உச்சியில் புதையல் இருப்பதாக கூறினார்.

temple sri-rangam trichy

தளபதி உடனே மேலே ஏற முயன்றார். வெள்ளையம்மாளும் உடன் உச்சியை சென்று அரங்கனை காண்பித்து புதையல் இதுதான் என்று கூறினார். தளபதி கீழே பார்க்கும் போது அவரை தள்ளிவிட்டு தானும் குதித்து விட்டார்கள்.மற்ற சேனைகள் பயந்து பின்வாங்கி ஒடியது. அவர்களின் நினைவாக இன்றும் அப்படியே வெள்ளை கோபுரமாய் காட்சியளிக்கிறது. இன்றும் அவர்கள் பரம்பரையில் யாரும் மரணித்தால் கோவில் மரியாதை செய்கிறார்கள். வெள்ளையம்மாளின் தியாகம் செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம்தான் இப்போது, வெள்ளைக் கோபுரமாக காட்சியளிக்கிறது