தகவல்கள்

ஆண்களும் அரச மரத்தை சுற்றலாமா? மறைந்திருக்கும் அதிகாலை சூட்சமம்!

Feb 03 2020 12:40:00 PM

"நள்ளிரவு நாலு மணிக்கு எந்திரிக்கனுமானு.?" வரும் விவேக் காமெடி போல, அதிகாலையில் விழிப்பது, நம்மில் பல பேருக்கும் அலர்ஜி தான் என்றாலும், நம்ம முன்னோர்கள் இந்த நேரத்துல தான் பல இரகசியங்கள் இருக்குன்னு வேற சொல்லி வெச்சிருக்காங்க. அது என்னான்னு தெரிஞ்சுக்கவாவது கொஞ்ச நாளுக்கு முழிச்சு பார்ப்போம். பொதுவாவே சாமி பக்தி, ஆண்கள விட பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதுக்குன்னு நாங்க எல்லாம் சாமி கும்பிடறது இல்லையான்னு கேட்க கூடாது. பொதுவா சொல்றேன். அதுலயும் கோவில் அரச மரத்த சுத்தி வந்தா நல்லதுன்னு சொல்வாங்க.

temple worship tree lord-vinayaga

பெரும்பாலும் அரச மரத்த சுத்தி பெண்கள் கூட்டம் தான் இருக்கும். அப்படி எல்லாம் இல்ல. ஆண்களும் அரச மரத்த சுத்தி வரலாம்னு சொல்றாங்க. பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம், இந்த மரத்தின் காற்றில் பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தக் கூடிய சக்தி உள்ளடக்கியிருக்கு. அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்களின் வரிசையில் அரசமரமும் இருக்கு. இதையெல்லாம் அப்பவே தெரிஞ்சுகிட்ட நம் முன்னோர்கள், ஒவ்வொரு அரச மரத்தடியிலயும் ஒரு பிள்ளையார் வெச்சு சாமி கும்பிட்டிருக்காங்க.