தெய்வீகம்

கார்த்திகை மாதம் முழுவதும் திருவிழா கொண்டாட்டம் நிகழும் ஆலயம்! இந்த மாதத்தில் தான் தியானத்தில் இருக்கும் நரசிம்மர் கண் விழித்து அருள் புரிவாரம்!

Nov 24 2021 02:58:00 PM

நம்ம இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் திருவிழா நடத்துவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் முழுவதும் திருவிழா கோலம் போல காட்சியளிக்கும் ஆலயம் நம்ம தமிழ்நாட்டில் உள்ளது. திருத்தணியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சோளிங்கர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு யோகநரசிம்மர் ஆலயம் மலையின் மீது அமைந்துள்ளது.

solingar yoga narisimmar

நரசிம்மரை குலதெய்வமாக கொண்டவர்களும், நரசிம்மரை இஷ்டதெய்வமாக கொண்டவர்களும் இந்த சோளிங்கர் யோகநரசிம்மரை தரிசனம் செய்யாமல் இருக்கமாட்டார்கள். 1305 படிகள் ஏறி குரங்குகளின் அட்டகாசங்களில் இருந்து தப்பித்து மலை மீது யோக நிலையில் அமர்ந்துள்ள யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய புண்ணியத்தை கொடுக்கும்.

solingar yoga narisimmar

இந்த ஆலயத்தில் நுழைந்தவுடன் நாம் முதலில் வழிபடுவது தாயார் அமிர்தபலவள்ளியை தான். இவருடைய முகத்தை பார்த்தவுடன் நம் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி ஒருவித சந்தோசம் பிறக்கும். இனிமையான சிரித்த முகத்துடன் தாயார் யோகாசன நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த ஆலயத்தில் உள்ள யோகநரசிம்மர் வருடம் முழுவதும் தியானத்தில் இருப்பாராம்.

solingar yoga narisimmar

இந்த கார்த்திகை மாதத்தில் தான் கண் விழித்து பார்த்து நமக்கு அருள் வழங்குவதாக சொல்கிறார்கள். எனவே சோளிங்கர் கோவிலில் கார்த்திகை மாதம் முழுவதும் விழாக்கோலம் போல காட்சியளிக்கும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் யோகநரசிம்மரை வழிபட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள். சோளிங்கர் யோகநரசிம்மரை வழிபட்டால் வாழ்க்கையில் சோகமே எப்போதும் இருக்காது என்ற கருத்தும் கோவில் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

solingar yoga narisimmar