தகவல்கள்

நீங்கள் சற்றும் எதிர்பார்த்திராத வடிவத்தை தி டீரென உங்கள் கனவில் கண்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

Aug 22 2021 04:05:00 PM

இந்து மதத்தில் இருக்கும் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவராக இருக்கும் சிவபெருமான் தரிசனம் அவ்வளவு எளிதில் எவருக்கும் கிடைத்து விடாது. சிவபெருமானை கனவில் தரிசிக்கும் பாக்கியமாவது ஒரு சிலருக்கு கிடைக்கும். அவ்வாறு கனவில் சிவபெருமானின் அம்சமான சிவலிங்கத்தை தரிசிப்பது பல நன்மைகளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தரும்.

sivalinga-in-dream

உங்கள் கனவில் சிவலிங்கத்தைப் பார்த்தால், நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் கனவில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டால், நீங்கள் தினமும் தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

 

sivalinga-in-dream

சிவபெருமானின் தலையில் உள்ள பிறையை உங்கள் கனவில் பார்த்தால், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். அது மட்டுமல்ல உங்கள் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதையும் இது குறிக்கிறது.

 

sivalinga-in-dream

உங்கள் கனவில் சிவபெருமானின் தலையில் இருந்து கங்கை பாயும் காட்சியை கண்டால் அதன் மூலம் உங்கள் ஆன்மா தூய்மை அடையும் என்பது பொருளாகும். அறிவும், செல்வமும், அன்பும் நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்பதையும் இது குறிக்கும்.