ஆன்மீகம்

மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை பார்க்கும் சித்திர குப்தரை வணங்கினால் ஆயுள் நீடிக்குமாம்!

Jan 10 2022 03:39:00 PM

உலகில் வாழும் எல்லா மக்களின் இறப்புக்கு பிறகும் அவர்கள் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் சொர்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்வார்கள். அவர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் எமதர்மன் மனிதர்களுக்கு தண்டனை கொடுப்பார். இந்த நிகழ்வில் எமதர்மனுக்கு துணையாக எப்போதும் கூடவே இருப்பவர் சித்திரகுப்தன். சித்திரகுப்தனுக்கு தான் மனிதர்கள் செய்த பாவ, புண்ணியங்களின் கணக்குகள் தெரியும்.

sithirakupthan valipaadu kanjipuram

இந்த சித்திரகுப்தன் எப்படி பிறந்தார் தெரியுமா? ஒரு முறை பார்வதி தேவி ஒரு அழகான சித்திரத்தை வரைந்துவிட்டு அந்த சித்திரத்தை சிவபெருமானிடம் காட்டினார். அந்த சித்திரம் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது. ஒரு முறை எமதர்மன் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் பாவ, புண்ணிய கணக்குளை பார்த்து அதற்கான தண்டனைகளை கொடுப்பதால் நான் மட்டும் தனி ஆளாக இருப்பதால் எனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அந்த நிகழ்வு சிவபெருமானுக்கு நியாபகம் வந்தது.

sithirakupthan valipaadu kanjipuram

உடனே அந்த சித்திரத்தை தன் முச்சுக் காற்று கொண்டு மனிதராக மாற்றினார் சிவபெருமான். சிவபெருமானின் மூச்சுக்காற்றில் இருந்து உயிர் பெற்றதால் சித்திர குப்தன் என்ற பெயர் இவருக்கு வந்தது. சித்ராபௌர்ணமி அன்று சித்திரகுப்தன் பிறந்தார். இவர் பிறக்கும்போதே கையில் எழுதுகோலுடனும், ஏடுகளுடனும் பிறந்தவர். பின்னர் இவர் எமதர்மனின் உதவியாளராக மாறி எல்லா மக்களின் பாவ, புண்ணிய விவரங்களை இன்றுவரை எழுதி வருகிறார்.

sithirakupthan valipaadu kanjipuram

சித்ராபௌர்ணமி அன்று சித்திரகுப்தரை வேண்டி விரதமிருந்து சித்திர குப்தரின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தால் நம்முடைய ஆயுள் நீடிக்கும். அதேபோல சித்திரகுபதரை வழிபடும்போது இனி வாழ்க்கையில் எந்த தீங்கும் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வது அவசியம். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது. அதேபோல அருப்புக்கோட்டையில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்ரகுப்தனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சென்று சித்ராபவுர்ணமி அன்று சித்திரகுப்தரை வழிபட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

sithirakupthan valipaadu kanjipuram