ஸ்லோகம்

அதிசக்தி வாய்ந்த அற்புத மந்திரம். தினமும் சொல்ல சொல்ல வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும்.

Jan 06 2021 08:33:00 AM

தொன்று தொட்டே நமது மரபில் ஊறிப்போன விஷயம் என்னவென்றால், மந்திரம் கூறி நமது இஷ்ட தெய்வங்களை வழிபடுவது. சிறு மந்திரமோ, இல்லை மிகப்பெரிய மந்திரமோ அதனை கூறி வழிபட்டால் நமக்கு மனநிம்மதி கிடைப்பதோடு எடுத்த எந்த காரியமானாலும் வெற்றிகிடைக்கும். அப்படி என்ன இந்த மந்திரங்களில் இருக்கிறது? பொதுவாக நமது மூளை பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இதில் கேட்கும் விஷயங்களாக மந்திரங்கள் இருக்கின்றன. யாகசாலையில் ஆராதனைகளின்போது மந்திரங்கள், கடவுள்களுக்கே சக்தி தருவதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு ஏன், எதுவும் இல்லாத கல் என்று என்னும் சிற்பங்களைக்கூட மந்திர உபன்யாசங்கள் செய்து சக்தியளிக்க செய்யும் வகையில் மந்திரங்கள் உள்ளது.

shri-ram rama-namam jai-sri-ram

அந்த வகையில் இப்போது நாம் காண இருக்கும் ஒரு மந்திரம் தான் "ராம நாமம்". பகவான் ஸ்ரீ விஸ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமரை மனதில் கொண்டு ஜபிக்கப்படும் நாமம் தான் இது. அது சரி அப்படி என்ன சிறப்பு உள்ளது இந்த நாமத்திற்கு? என்கிறீர்களா. உண்மையில் இந்த இரண்டெழுத்து மந்திரமானது ஈரேழு உலகங்களிலும் மகாசக்தி வாய்ந்தது. எவராலும் கட்டி வைக்க முடியாத வாயு மைந்தனையே கட்டுக்குள் வைத்த மிக சக்திவாய்ந்தது இந்த மந்திரம்.

shri-ram rama-namam jai-sri-ram

அனுமனை கட்டி வைத்தது சரி, அந்த மாத்திரம் எப்படி நமக்கு வேண்டிய செல்வதை தரும்? நன்கு சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும். ராம நாமம் எங்கு ஜபிக்கப்படுகிறது அங்கு சகல செல்வங்களும் குறைவின்றி நிறைந்து இருக்கும். என்ன காரணம் என்றால், இந்த நாமத்தை சொல்ல தொடங்கியகணமே, அனுமன் எங்கிருந்தாலும் ஜபிக்கப்படும் இடத்திற்கு பறந்து வந்துவிடுவார். மங்கள மூர்த்தி அனுமன் சங்கடங்களை தீர்க்கக்கூடியவர். எடுத்த காரியத்தில் வெற்றிபெற நிச்சயமாக அனுமன் துணை வேண்டும். அனுமன் உங்கள் அருகில் இருக்கும்வரை எந்த பிணி, துயரம் உங்களை நெருங்காது. அதோடு மட்டுமல்லாமல் அனுமன் பகவானின் தீவிர பக்தர். அவரது வருகை அனைவரையும் மிகுந்த ஆனந்தத்தில் ஆழ்த்திவிடும்.

shri-ram rama-namam jai-sri-ram

அடுத்து மக லட்சுமி தேவி பகவானின் தர்மபத்தினி. மகாவிஷ்ணுவின் இதயத்தில் எப்போதும் நிரந்தர வாசம் செய்பவர். பகவான் எங்கெல்லாம் இருக்கிறாரோ, நிச்சயமாக தாயாரும் அங்கு அருள்புரிவார்கள். மகாலக்ஷ்மி வந்துவிட்டால், நமக்கு வேண்டிய அஷ்ட செல்வங்களும் பரிபூரணமாக கிடைக்கும்.

shri-ram rama-namam jai-sri-ram

அடுத்து பார்த்தால், வாயுபுத்திரன் அனுமான், பரம்பொருள் மகாசிவனின் அம்சமாவார். அனுமன் அங்கு இருக்கிறார் என்றல் பரம்பொருள் சிவபெருமான் அங்கு இருக்கிறான் என்று அர்த்தம். பரம்பொருள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் அவரில் பதியான மகாசக்தி பார்வதிதேவியும் உடன் இருப்பார்கள். பரம்பொருளும் பார்வதிதேவியும் இருக்கும் இடத்தில் எந்த மனசங்கடங்களோ, தேவையற்ற பயமோ, இல்லை பிணி பீடை போன்ற எதிர்மறை சக்திகள் இருக்கவே இருக்காது.

shri-ram rama-namam jai-sri-ram

தாயும் தந்தையும் உள்ள இடத்தில தான் கணபதியும், முருகப்பெருமானும் இருப்பார்கள். முழுமுதற்கடவுள் விநாயகரும், வினைதீர்க்கும் வெளிவரும் உடனிருந்தால் எந்த காரியமானாலும் வெற்றி உறுதி. தாய் தந்தை இருவரும் தான் உலகமே என்று நமது விநாயகர் ஏற்கனவே நிருபித்துவிட்டார். அப்போது இங்கு அனைவரும் ஒன்றுகூடியது முப்பது முக்கோடி தேவர்களும் கூடயதற்கு சமம். சற்றே சிந்தியுங்கள், இரண்டு எழுத்து மந்திரம் எவ்வளவு சிறப்புகளை நமக்கு கொடுக்கிறது என்று. நாம் மனதால் நினைத்து வயல் உச்சரித்தால் இதன்மகிமை உங்களுக்கு அளவிடமுடியாத ஆனந்தத்தினையும், ஆற்றலையும் அள்ளித்தரும் அற்புத மந்திரமாக திகழும் என்பதில் இந்திய ஐயப்பாடும் இல்லை. ராமநாமம் ஜெபிப்போம். மகிழ்வுடன் வாழ்வோம்.