தகவல்கள்

வாசனையால் வசியம் செய்யும் தாழம்பூவை பூஜைக்கு வைக்கவே கூடாது! வழிதவறி போனால், இப்படித்தான்! நாற்பதாயிர ஆண்டு சா பம்!

Feb 15 2021 01:30:00 PM

நண்பர் தோட்டத்தில் தாழம்பூ பூத்து வாசனை, ஊரையே கமகமக்க செய்திருக்கும். சும்மாவே இத்தனை பூக்கள் வீணாகிறதே? நாமாவது அதனை பறித்து சாமிக்கு வைக்கலாம் என அவர்களிடம் பறித்துக்கொள்ள அனுமதி கேட்டுக்கொண்டிருந்த போது, 'அவர்கள் தாழம்பூவையா பூஜைக்கு வைக்க போற? அந்த பூவை பூஜைக்கு வைக்க மாட்டாங்களேப்பா?' என கூறினார். எல்லா பூக்களுமே இறைவனுக்காக தானே படைக்கப்பட்டுள்ளது? அதில் தாழம்பூ மட்டும் என்ன பாவம் செய்தது? என நண்பரிடம் வினாவி கொண்டிருந்தேன். அவர் சொன்னபதில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

thalamboo sivan-poojai

பிரம்மா மற்றும் திருமால் இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழவே, சிவன் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தாராம். உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையும் மற்றும் அடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவரே பெரியவர் என சொல்லி இருவரையும் போட்டிக்கு அனுப்பி வைத்தாராம். திருமால் வராக அவதாரம் எடுத்து, நிலத்தை குடைந்து கொண்டே சென்றாராம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அடியை காணமுடியவில்லையாம். 

thalamboo sivan-poojai

பிரம்ம தேவனோ அன்னப்பறவையாக மாறி, சிவனின் தலையின் உச்சியை காண சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஒரு தாழம்பூ சிவனின் தலையில் இருந்து விழுந்து கொண்டிருந்ததாம். பிரம்மதேவன் அந்த பூவிடம், சிவனின் தலை உச்சிக்கு செல்ல இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என கேட்டாராம். அதற்கு அந்த தாழம்பூவோ, நான் சிவனின் சடையில் இருந்து நழுவி, நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் இன்னும் நிலத்தை காணமுடியவில்லை என சொன்னதாம். அப்படியானால் யூகித்துக்கொள்ளுங்கள், சிவனின் தலை உச்சியின் உயரத்தை!

thalamboo sivan-poojai

பிரம்ம தேவன் தாழம்பூவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தாராம். 'பிரம்ம தேவன் சிவனின் உச்சியை கண்டதாக சிவனிடம் தாழம்பூ சொல்ல வேண்டும்' என்பது தான் அந்த வேண்டுகோள். தாழம்பூவும் பொ ய்சாட்சி சொல்லியதாம். தாழம்பூ பொ ய் சொன்னால், அதனை சிவன் அப்படியே நம்பிவிடுவாரா? இறைவன் அல்லவா? அதனால் பொ ய் சாட்சி சொன்ன தாழம்பூ, இனி சிவ பூஜைக்கு பயன்படுத்த கூடாது என்றும் பொ ய் சொல்ல தூண்டிய பிரம்மாவிற்கு கோவிலே இருக்க கூடாது என்றும் சா பம் விட்டார். 

thalamboo sivan-poojai

பிரம்மா மற்றும் திருமாலின் அகந்தை நீக்கி, யாருமே பெரியவர் சிறியவர் என இல்லை உலகிற்கு உணர்த்த, சிவபெருமான் அடியையும் முடியையும் காணும் போட்டிவைத்தார். அப்படி சிவனது அடியையும் முடியையும் காண முடியாத ஜோதி ஸ்வரூபமாக காட்சியளிக்கும் இடம் தான் திருவண்ணாமலை. சில சிவன் கருவறையில், சிலையின் பின்புறம் லிங்கோத்பவர் சிலையில் அன்னப்பறவை மற்றும் வராகத்துடன் இருக்கும் பார்த்ததுண்டா? அதற்கு பின்னால் இருக்கும் கதையும் இதுதானாம். இதெல்லாம் உண்மையா தெரியவில்லை. ஏனெனில் இவையெல்லாம் உண்மை என நம்புவதற்கு நம்மிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்த கூடாதென சொல்வதற்கு பின்னர் இந்த கதை தான் உள்ளது.