தெய்வீகம்

ஏழரை சனியில் இருந்து தப்பிக்க முடியுமா? சனி பகவானை சாந்தப்படுத்த நினைத்தால் அதுக்கு நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

Sep 23 2021 03:44:00 PM

சனி என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அடிவயிறு கலங்கும். சனி என்றாலே கோபம் மற்றும் உக்கிரமான கடவுள், நம்ம தண்டிப்பவர் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது ஒரு விதத்தில் உண்மை தான். சனி மக்களின் பாவ புண்ணியங்களின்படி அவர்களுக்கு நல்லது கெட்டது இரண்டையும் செய்வார். அதற்காக அவர் கொ டூரமானவர் என்றெல்லாம் சித்தரிப்பது தவறு.

shani-dev worship-methods

நம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்லுவாங்க. சனியைப்போல கொடுப்பாரும் இல்லை. சனியைப்போல கெடுப்பாரும் இல்லை. இந்த பழமொழியில் இருக்கும் கருத்து உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். ஒருவரை சோதிக்க நினைத்தால் அவருக்கு எண்ணற்ற கஷ்டங்களை கொடுத்து அந்த நபரை ஒரு வழியாக்கி விடுவார் சனி. விக்கிரமாதித்த மகாராஜாவே சனியிடம் சிக்கிக்கொன்டு படாத பாடு பட்டு அதன் பிறகு தான் நல்ல நிலையை அடைந்தார்.

shani-dev worship-methods

மிகப்பெரிய சாம்ராட் என்று வர்ணிக்கப்படும் விக்கிரமாதித்தனுக்கே அந்த கதி என்றால் நம்முடைய நிலைமை என்னவாகும் என்று வருத்தப்படாதீங்க. நீங்க செய்யும் பாவத்தின் அடிப்படையிலேயே சனி உங்களுக்கு தண்டனைகளை வழங்குவார். நீங்க புண்ணிய காரியங்களை செய்தால் ஏழரை சனியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணக்கூடாது. உங்கள் முன்ஜென்ம பாவங்களின் பலன்களை கூட ஏழரை சனியில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

shani-dev worship-methods

சனி பகவானும் சாந்தமானவர் தான். அநியாயம் அல்லது பாவம் செய்யும் மனிதர்களுக்கு தான் அவர் கோபக்கார கடவுள். நீங்கள் நல்ல காரியங்களை செய்துவரும் சாதாரண மனிதர் என்றால் உங்களிடம் சனி ஏன் கோபத்தை காட்டப்போகிறார்? ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து முழுவதும் தப்பிக்க முடியாது என்றாலும் அதை குறைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இதை எங்க பாட்டி எனக்கு சொன்னாங்க. அதை நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.

shani-dev worship-methods

ஹனுமனை தினமும் வழிபட வேண்டும். தினமும் ராம நாமத்தை ஜெபித்து அனுமனை வழிபட்டால் சனியின் தாக்கம் உங்களை அதிகம் பாதிக்காமல் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கால பைரவரை வணங்குவது நல்லது. சித்தர்கள், மஹான்கள் போன்ற பெரியோர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வந்தால் சனியின் தாக்கத்தை குறைக்கலாம்.

shani-dev worship-methods

உடல் ஊனமுற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உணவு, உடை போன்ற உதவிகளை செய்து வந்தால் ஏழரைச்சனியின் பாதிப்புகள் சற்றே குறையும். எக்காரணம் கொண்டும் சனிக்கிழமையில் அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நல்லெண்ணெய் தீபமும் ஏற்றலாம். உங்கள் வீடுகளுக்கு காகம் வந்தால் எள் கலந்த சாதத்தை வையுங்கள். இந்த வழிமுறைகளை செய்து வந்தால் சனி பகவான் சற்று சாந்தமடைவார். நீங்கள் நல்ல காரியங்களை மட்டும் செய்து வந்தால் சனியும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.