தெய்வீகம்

சனியின் பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி? பரிகாரங்கள் என்ன? நம் வாழ்வில் சனி உண்டாக என்ன காரணம்?

Feb 25 2021 12:49:00 PM

நம் வாழ்வில் அனைவரும் ஒரு முறையாவது சனியால் பாதிக்கப்பட்டிருப்போம். அப்படி சனி நம்மை பிடித்து ஆட்டுகிறது என்றால் நம்மால் எந்த தொழிலும் செய்யமுடியாது என்று அர்த்தம். ஆனால் நாம் அந்த சனியையே சில பரிகாரங்கள் செய்து சரி செய்யலாம்.

sani bagavan siva peruman anjaneyar valipaadu

சனி எதனால் பிடிக்கிறது?
நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்கள் அடிப்படையில் தான் சனி நம்மை பிடிக்கிறது. நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் எப்படி நமக்கு பங்குள்ளதோ அதைப்போன்றே அவர்களின் பாவ புண்ணியங்களிலும் நமக்கு பங்குள்ளது.இதைத்தான் நம் முன்னோர்கள் கர்மா என்று கூறியுள்ளனர்.

sani bagavan siva peruman anjaneyar valipaadu

சனியின் வகைகள்,

7 1/2 சனியாகவும், (மங்குசனி,பொங்குசனி,மரணசனி), அட்டம சனியாகவும், கண்டசனியாகவும், அர்தாஷ்டமசனியாகவும் வளம் வந்து சனி பகவான் தன் வேலையை செய்துவருகிறார். சனி பிடித்தால் அதில் இருந்து மீள சில வழிகள் உள்ளன.

sani bagavan siva peruman anjaneyar valipaadu

சனியில் இருந்து விடுபடும் முறைகள்,

எறும்புக்கு உணவு வைப்பது,
காகத்திற்கு உணவு வைப்பது,
நாட்டு நாய்க்கு உணவு வைப்பது,
ஊனமுற்றோருக்கு உணவு கொடுப்பது,
பசுவுக்கு உணவு வைப்பது,

sani bagavan siva peruman anjaneyar valipaadu

போன்ற செயல்களை செய்வதன் மூலம் சனி பகவான் மனம் குளிர்வார். நம் பாவங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எனவே முடிந்தவரை எறும்புக்காவது உணவு வைத்து நம் பாவங்களை குறைந்து பலன் பெறுங்கள்.

sani bagavan siva peruman anjaneyar valipaadu

சித்தர் வழிபாடு,

சித்தர் கோவிலுக்கு சென்று குறைந்த பட்சம் இரண்டரை மணி நேரம் தியானம் செய்தால் அந்த சித்தர்களின் அருளை பெற முடியும். சனியின் பார்வையும் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

sani bagavan siva peruman anjaneyar valipaadu

சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வந்தால் சனி நம்மை விட்டு விலகும். அதே போல் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டாலும் சனி பகவானின் அருளை பெற முடியும்.

sani bagavan siva peruman anjaneyar valipaadu