தகவல்கள்

வீட்டின் சமையலறை பள்ளமாக இருந்தால் குடும்பத்திற்கு ஆகாதா? கண்டவங்க பேச்சைக்கேட்டிருந்தால், இந்நேரம் அதெல்லாம் நடந்திருக்கும்! வாஸ்து வெட்டிப்பந்தா!

Sep 25 2021 10:17:00 PM

எத்தனையோ பேர் சொந்த வீடில்லாமல் அல்லல் பட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரு சிலர் சொந்தமாக வீடு கட்டியிருந்தாலும், வாஸ்துவை கையில் பிடித்துக்கொண்டு, அதில் நொட்டை, இதில் சொட்டைன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க. சரி சொந்த வீடு கட்டினவங்க வாஸ்து தவறி காட்டிவிட்டோமேன்னு புலம்பலாம். வாடகை வீட்டில் இருப்பவங்களுக்கு என்னப்பா குறைச்சல்? அவங்களும் வீடு வாஸ்துப்படி இல்லையேன்னு புலம்பித்தவிக்கிறாங்க. ஹால் கோணலா இருந்தா ராசியில்லைன்னு எல்லோரும் சொல்லி, அழகான வீட்டை மாற்றிவிட்டேன்.

house wasthu home

இப்போ பாத்ரூமை விட, சமையலறை சின்னதா இருக்குன்னு சொல்லி, இந்த வீட்டையும் மாற்றச் சொல்லி டார்ச்சர் பண்ணறாங்க. வீட்டுக்கு வரவங்க போறவங்க எல்லாம் சொல்வதற்காக, குடியிருக்கும் வீட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டால், குடும்பம் எப்படி உருப்படும் சொல்லுங்க. வாஸ்துபடி உள்ள வீட்டில் குடியிருக்க வேண்டுமென சொல்லி, இது வரையில் நிம்மதியா ஒரு வீட்டில் கூட இருந்ததில்லை. எனக்கு அரசு வேலை என்பதால், அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

house wasthu home

கடைசியா மதுரையில் நாங்கள் இருந்த ஒரு வீட்டில், சமையலறை வீட்டின் தரை மட்டத்திலிருந்து கீழே இருந்தது. அது ஆகாது என வீட்டுக்கு வந்தவர்கள் சிலர் சொன்னாங்க. அப்போ எனக்கு செம கோவம். ஆனது ஆகட்டும். இனியெல்லாம் இந்த மாதிரி வீடு பிடிக்க முடியாதுங்க, எனக்கு திருப்தியா இருக்குன்னு சொன்னேன். ஒருத்தரும் வாய் திறக்கல. அவங்க சொல்ற அளவுக்கு அப்படி ஒன்றும் கெட்டதாக அங்கு நடக்கவில்லை. மாறாக பதவி உயர்வில் வேறு ஊருக்கு சென்றோம்.

house wasthu home

எங்க குடும்பத்தினரிடமும் சொல்லி புரிய வைத்துவிட்டேன். நம்ம ஊரில் சொந்த வீடு கட்டும் போது, உங்களுக்கு பிடிச்ச மாதிரி, வாஸ்து எல்லாம் பார்த்து கட்டிக்கலாம். இப்போதைக்கு யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே என்கிட்டே சொல்லி டென்ஷன் படுத்தக்கூடாதுன்னு சொல்லிவிட்டேன். இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கேன். வாஸ்துப்படி கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமென சொல்றாங்க. அந்த வாஸ்துவினால் கொஞ்ச நாள் நிம்மதி இழந்துதவித்தேன். எல்லாம் மனசு தாங்க காரணம்.