தெய்வீகம்

#vajrasana: காளி கோவிலுக்கு சென்றாலே கண்களில் இருந்து அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வருகிறதே எதனால்?

May 01 2020 12:53:00 PM

அதீத பக்தி காரணமாக சிலருக்கு கருவறையில் உள்ள சிலையை பார்த்தாலே அழுகை வந்துவிடும். மனம் இலேசாக இருக்கும் போது, இப்படி ஒரு நிலையை கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோரும் நேர்கொள்வோம். ஆனால் இந்த அழுகை ஆனந்தமான நிலையை மனதிற்க்கு கொடுக்கிறதா அல்லது துக்கமான நிலையை கொடுக்கிறதா என்பது முக்கியம். பக்தி பரவசத்தில் திளைத்திருக்கும் போது, ஆனந்தமான நிலையில் கண்ணீர் வரும் அல்லது கடவுள் முன்னிலையில் கவலையை கூறும்போதும் அழுகை வருவதுண்டு. பெரும்பாலும் பெண் தெய்வங்களை பார்க்கும் போது இந்த நிலை ஏற்படும். சிலருக்கு சாந்தமாக இருக்கும் தெய்வங்களை பார்த்தால் அழுகை வரும், சிலருக்கு உக்கிரமான பெண் தெய்வங்களை பார்த்தால் கண்ணீர் வரும்.

vajrasana yoga kali-amman

பெரும்பாலானோர் உக்கிரமான பெண் தெய்வங்களை வணங்கும் போதே அழுகை வருவதாக கூற கேள்விப்பட்டிருப்போம். அதில் குறிப்பாக மாகாளியை சொல்லலாம். அபரிமிதமான பக்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதுபோலவே அம்பாளின் அருள் இருந்தால் மட்டுமே இந்த பரவச நிலையை அடைய முடியும். இந்த நிலை பக்தியால் பெருகும் ஆனந்த கண்ணீர் எனில் மனத்துள் மகிழ்ச்சி உண்டாகும். துக்கத்தால் கடவுளை பார்த்தால் வரும் கண்ணீர் என்றால் கூட, மனதின் பாரம் குறைக்கும் ஒரு வகை பயிற்சி என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வருகிறது எனில் அதனை கட்டுப்படுத்த வரப்பிரசாதமாக உள்ள ஒரு ஆசனம் தான் வஜ்ராசனம். 

vajrasana yoga kali-amman

எளிதில் உணர்ச்சிவசப்படுவோருக்கு இது வரப்பிரசாதமான ஆசனம் தான். இந்த ஆசனம் செய்துவர நாளுக்கு நாள் மனம் திட சித்தத்துடன் இருக்கும். காளி கோவில் மட்டுமின்றி அபாரமான பக்தி இருப்பின் எந்த தெய்வத்தை பார்த்தாலும் அழுகை பெருக்கெடுக்கும்.