தத்வமஸி

அமானுஷ்ய சக்திகள் இந்த உலகத்தில் இருப்பது உண்மையா? பக்கத்துவீட்டு அக்கா பேய் புடிச்சு எல்லோரையும் பயமுறுத்திய உண்மை சம்பவம்!

Jan 07 2022 01:23:00 PM

இந்த உலகில் நல்லது என்ற ஒரு விஷயம் இருக்கும்போது அதற்கு நேர் எதிர்மறையான சக்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதை நம்பாவிட்டாலும் நம்மை சுற்றி இருக்கும் விஷயங்கள் நம்மை நம்ப வைத்து விடும். எனக்கும் பேய், பிசாசு பற்றி எந்த நம்பிக்கையும் கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் ஊரை சேர்ந்த ஒரு பெண் வேறு ஜாதி பையனை காதலித்தார்.

real life incident people action

அவருடைய பெற்றோர் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த பெண் வேறு வழியின்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இரவு நேரம் என்பதால் யாரும் அந்த பெண்ணை தேடவில்லை. மூன்று நாட்கள் கழித்து தான் அந்த கிணற்றில் அந்த பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டதை ஊர் மக்கள் பார்த்தார்கள்.

real life incident people action

அப்ப இருந்தே யாரும் அந்த கிணத்து மேட்டுப்பக்கம் போகமாட்டாங்க. அந்த பெண்ணின் ஆவி அந்த கிணற்றில் இருப்பதாக ஊர்மக்கள் எல்லோரும் அரசால் புரசலாக பேசிக்கொண்டார்கள். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு மதியம் ஒரு மணி நேரத்தில் எங்க பக்கத்து வீட்டு அக்கா அந்த கிணத்து பக்கம் போயிருக்காங்க. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கிணற்றுக்கு அருகில் செல்லும்போது கல் தடுக்கி விழுந்துவிட்டார்.

real life incident people action

அன்று முதலே அவர் யாரிடமும் பேசவில்லை. எதோ பித்து பிடிச்சதை போலவே சுத்திக்கிட்டு இருந்தாங்க. இந்த பொண்ணுக்கு பேய் புடிச்சுருக்கு என்று ஊர்மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாள் எல்லோரும் ஒக்காந்து பேசிகிட்டு இருந்தப்போ செத்துப்போன அந்த பெண் பற்றி குறை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. உடனே இந்த பக்கத்து வீட்டு அக்காவுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. என்னப்பத்தி எதுக்கு பேசுறீங்க. என் சாவுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம் என்று சொல்லிக்கொண்டே எல்லோர் மீதும் அடிக்க பாய்ந்துவிட்டார்.

real life incident people action

அதுக்கு அப்புறம் தான் அந்த அக்காவுக்கு பேய் பிடித்திருப்பதை ஊர்மக்கள் அறிந்து கொண்டனர். உடனே ஒரு மிகப்பெரிய மந்திரவாதியை கூட்டிட்டு வந்து ரெண்டு நாள் அவங்க வீட்டில் பூஜை செய்து அந்த பேய்யை அந்த அக்காவின் உடம்பில் இருந்து விரட்டி அடித்தார்கள். பேய் இல்லைன்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த என்னை மாதிரியான ஆட்களே பேய் இருக்கு என்று நம்ப வைத்தது இந்த சம்பவம் தான். அப்போ இருந்து இப்போ வரைக்கும் யாரும் அந்த கெணத்து மேட்டுப்பக்கம் போகவே மாட்டாங்க. எல்லாம் பேய் காட்டிய பயம் தான்.

real life incident people action