பூணூல் ஏன் அணிகின்றனர்? எதற்கு அணிகின்றனர்? என்று வழக்கமாக பேசும் கதைகளுக்கு மாற்றாக, சாதி, மத பேதம் கடந்து, அதன் பின்னால் உள்ள அறிவியல் விளக்கத்தை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம். இன்னார் தான் பூணூல் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. ஆண், பெண் பேதம் இன்றி யார் வேண்டுமானாலும் அணியலாம்.
பூணூல் அணியும்போது, உடல் இரு பகுதிகளாக பிரித்துக்காண்பிக்கப்படுகிறது. இடது பக்க தோளில் தொடங்கி, வலது பக்க வயிற்றுக்கு கீழே முடிவடையும். அதாவது உடலை இரண்டு பாகமாக பிரிக்கும். நன்கு உற்றுநோக்கினால், உடலின் வலது கை, தலை, இதயம் ஆகிய முக்கிய பகுதிகள் ஒரு பக்கம் வரும். உடலின் இடது கை, வயிறு, இடப்புக்கு கீழே உள்ள பகுதிகள் ஒரு பக்கம் வரும்.
நம்முடைய சிந்தனைக்கும், இயக்கத்திற்கும் முக்கியமானது முதலில் சொன்ன பாகம். அடுத்து சொன்ன பாகம், எல்லா விலங்குகளுக்கும் பொதுவாக இருப்பது. மற்ற உயிர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக்காண்பிப்பது, உடலின் மேற்பகுதியாகும். ஒருவர் செய்யும் காரியத்தின் அடிப்படையில், உயர்ந்தது, தாழ்ந்தது என்பதை வேறுபடுத்தி உணர்த்த அணிவதே பூணூல்.
ஆனால் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை உணர்த்த அணிவதாக, பிற்காலத்தில் ஒரு நம்பிக்கை விதைக்கப்பட்டாலும், இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் மேற்சொன்னது தான். பிராமணர் சமூகத்தில் வேதங்களை காற்றுத்தேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, கல்வி தரநிலையின் அடையாளமாக பூணூல் அணிந்தனர்.
பிராமணர்களை தாண்டி, வேறு சில சமூக மக்களும் பூணூல் அணிகின்றனர். ஒரு காலத்தில் ஆண், பெண் பேதமின்றி பூணூல் அணிந்து வந்த நிலையில், இடையில் சில சமூக காரணங்களால், ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்ற நிலை உருவானது. அதே இன்றும் தொடர்வதால் பூணூல் என்றாலே அது ஆண்களுக்கானது என்கிற மாதிரி எண்ணம் மக்களிடம் பதிந்துவிட்டது.