தெய்வீகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? இந்த தோஷம் நீங்க நாம் எந்த கடவுளை வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்?

Nov 19 2021 05:16:00 PM

நம் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் மட்டுமே எல்லோரும் கடவுளிடமும், ஜோதிடர்களிடமும் சென்று நம் பிரச்சனைகளை சொல்கிறோம். அப்படி நம்ம ஜோதிடர்களிடம் செல்லும்போது நமக்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை அவர்கள் தெளிவாக சொல்வார்கள். நாம் எதுவும் செய்யாமலேயே சில தோஷங்கள் நம்மை பற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு வகையான தோஷத்தை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

pramma haththi thosam valipaadu eeswar

பிரம்மஹத்தி தோஷம் பற்றி நாம் நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த தோஷம் எப்படி உருவாகிறது, அதனை எப்படி சரி செய்வது என்று நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். பிராமணர்கள் மட்டுமே பொதுவாக இந்த பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள். அப்படி ஒன்னும் கிடையாது. பிரம்மத்தை உணர்ந்த கடவுள் பக்தி கொண்ட யாராக இருந்தாலும் இந்த பிரம்மகத்தி தோஷத்தால் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

pramma haththi thosam valipaadu eeswar

ஒருவரின் ஜாதகத்தில் குருவும், சனியும் ஒன்றாக சேர்ந்தால் சனி பகவானின் பார்வை குருவின் மீது விழுந்தால் இந்த பிரம்மகத்தி தோஷம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். நமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால் ஒரு உயிரை கொன்றால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களின் பலனாக இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

pramma haththi thosam valipaadu eeswar

அதிக கடவுள் பக்தி கொண்ட ராமர் மற்றும் பல மன்னர்களுக்கே இந்த பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி இருக்கிறது. சிவபெருமானை வணங்கினால் இந்த பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம். திருவிடை மருதூர் ஆலயத்தில் சென்று சிவனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம். ராவணனை கொன்ற ராமர் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு ராமேஸ்வரத்தில் மணலால் லிங்கம் செய்து வழிபட்டு தன்னுடைய பாவத்தை தீர்த்துக்கொண்டார் என்று புராணங்கள் சொல்கிறது. உங்க ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து பரிகாரங்கள் மேற்கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும்.

pramma haththi thosam valipaadu eeswar