தகவல்கள்

மறுஜென்மம் இருப்பது உண்மையா? நிஜமாவே இந்த உலகில் மறு ஜென்மம் எடுத்த நபர்கள் இருக்கிறார்களா?

Aug 19 2021 10:09:00 PM

இந்த உலகில் பல விசித்திரமான சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. சில மக்கள் முன் ஜென்மம் என்பது இல்லவே இல்லை என்று ஆணித்தனமாக சொல்கிறார்கள். உண்மையில் முன் ஜென்மம் தொடர்பான ஆராய்ச்சிகளையும், அது தொடர்பான நபர்களையும் அறிவியல் ஆய்வாளர்கள் தேடி கண்டுபிடித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள். அதுவும் நம்ம நாட்டிலேயே இது போன்ற சில உண்மை சம்பவங்கள் நடந்துள்ளன.

poorva maru jenmam people

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1969 ஆம் ஆண்டு மஞ்சுளா சர்மா என்ற ஒரு பெண்மணி பிறந்து வளர்ந்தார். அவள் குடும்பம் மிகவும் ஏ*ழ்மையான குடும்பம். அவருக்கு சரியாக மூன்று வயது ஆரம்பிக்கும்போது நீங்க என்னோட அப்பா, அம்மா இல்லை, இது என்னோட ஊர் இல்லை, எங்க ஊர் பக்கத்து ஊர், எங்க அப்பா, அம்மா அங்க இருக்காங்க, எனக்கு ஒரு அண்ணன் இருக்கான், அவன் என்மேல பாசமா இருப்பான் என்று சொல்லி இருக்கிறார். என் ஒன்பதாவது வயதில் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து இருந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

poorva maru jenmam people

இந்த சின்ன குழந்தை ஏதோ உளறுது என்று யாரும் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டார்கள். அடிக்கடி தன்னுடைய முன்ஜென்மம் பற்றி எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார். பின்னர் சில வருடங்களுக்கு பின்னர் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை பார்த்து இவர் தான் எங்க சித்தப்பா என்று சொல்லி இருக்கிறார். அந்த நபர் மஞ்சுளாவிடம் விசாரிக்க அவர் சொல்வதெல்லாம் உண்மை தான், சில வருடங்களுக்கு முன்னர் இந்த சிறுமி சொல்வதைப்போல இந்த பெண் இ*றந்துவிட்டாள். இது இவளின் இரண்டாவது ஜென்மம் என்று சொல்லி இருக்கிறார். உடனே பக்கத்துக்கு ஊருக்கு கூட்டி சென்று தன்னுடைய பெற்றோரையும், நண்பர்களையும் அடையாளம் கண்டுபிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார். அந்த கிணற்றுப்பக்கம் சென்று பார்த்து இந்த கிணத்துல தான் விழுந்து இ*றந்தேன் என்று சொல்லி இருக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல அவருடைய பழைய நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு மறந்துவிட்டது. ஆனால் கிணற்றைப் பற்றி பேசினாலோ கிணற்றை நேரில் பார்த்தாலோ கடைசிவரை அவருக்குள் ஒரு ப*யமும், ப*தற்றமும் இருந்துகொண்டே இருந்தது.

poorva maru jenmam people

அதேபோல பிபிசி சேனலில் 1990 ஆம் ஆண்டு நாற்பது நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில் பிட்டு சிங் என்ற ஒரு சிறுவனைப்பற்றி காட்டினார்கள். இந்த சிறுவனும் தனக்கு முன் ஜென்மம் இருந்தது என்று சொல்லி அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்தான். வடமாநிலத்தை சேர்ந்த டிட்டு சிங் என்னும் சிறுவன் தனது 3 வயதிலேயே எனக்கு முன் ஜென்மம் இருந்தது என்று சொல்லி அனைவரையும் அ*திர்ச்சி அடைய செய்தான். என்னுடைய சொந்த ஊர் ஆக்ரா என்றும், அங்கே என் மனைவி நண்பர்கள் எல்லோரும் வசிக்கிறார்கள் என்றும், நான் சொந்தமாக ஒரு கடை வைத்து நடத்தி வந்தேன் என்றும் சொல்லியுள்ளார்.

poorva maru jenmam people

என்னை சில நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொ*ன்று விட்டார்கள் என்றும் அந்த சிறுவன் சொல்லியுள்ளார். இந்த பையன் சொல்வதெல்லாம் உண்மையா என கண்டுபிடிக்க அவரின் அண்ணனை ஆக்ராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் சொன்னதைப்போலவே ஆக்ராவில் அந்த பையன் சொன்ன இடத்தில் அந்த கடையும், அவருடைய மனைவியும் இருந்தார்கள். அந்த பையன் சொன்னதைப்போலவே அவருடைய முன் ஜென்மத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டு கொ*ன்றிருக்கிறார்கள். முன் ஜென்மத்தில் அவருடைய மண்டையில் எந்த இடத்தில் துப்பாக்கி குண்டு அடிபட்டு இ*றந்தாரா அதேபோலவே இந்த ஜென்மத்திலும் அவருடைய தலையில் அதே இடத்தில் ஒரு மச்சம் இருக்கிறது. மொத்தத்தில் இந்த பூர்வ ஜென்மம், மறு ஜென்மம் எல்லாமே உண்மைதான் என்றும், இன்னும் அதைப்பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

poorva maru jenmam people