ஆன்மீகம்

ஆன்மீகம் : வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருகி,செல்வம் கொழிக்க, சமையலறையை எவ்வாறு பராமரிக்கவேண்டும்?

Jan 27 2021 12:43:00 PM

அன்னபூரணியை வழிபட்டால் நம் வீட்டில் அன்னம்,தனம், தானியம் பெருகும் என்பது ஐதீகம்.  அன்னபூரணியை பூஜை அறையில் வைத்து வழிபடுவதைவிட நம் சமயலறையில் வைத்து வழிபடுவது நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும்.

kitchen poojai room god live

நம் பூஜை அறையில் அன்னபூரணியின் பித்தளை சிலை ஒன்றை வாங்கி வைத்து அதில் அரிசியை போட்டு வைத்து வழிபட்டால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதைப்போன்று நம் வீட்டில் சமையல் தொடங்கும் முன்பு அன்னபூரணியை வழிபட்டபின்னர் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.

kitchen poojai room god live

நம் வீட்டில் அரிசியை குறையாமல் வைத்துக்கொள்ளவேண்டும். கல் உப்பு எப்போதும் வீட்டில் குறையாத படி பார்த்துக் கொள்ளவேண்டும். கல் உப்பு குறைய ஆரம்பித்தால் உடனே கல் உப்பு வாங்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கல் உப்பை எப்போதும் பீங்கான் பாட்டில்களில் தான் வைக்க வேண்டும்.

kitchen poojai room god live

வீட்டில் செல்வம் பெறுக எப்போதும் நிறை குடம் இருந்து கொண்டே இருக்கவேண்டும். நம் வீடுகளில் எப்போதும் பொதுவாக பிளாஸ்டிக் குடங்களே நாம் பயன்படுத்துவோம். பண்டைய காலங்களில் மக்கள் மண் பானை மற்றும் செம்பு, பித்தளை மற்றும் மண் பானைகளில் வைத்திருப்பார்கள். அதுபோலவே நாமும் செம்பு, பித்தளை, மண் பானைகளில் தண்ணீர் நிரப்பி அந்த குடம் எப்போதும் குறையாமல் நிறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

kitchen poojai room god live

ஊறுகாய் எப்போதும் வீட்டில் குறையாமல் இருக்கும் படி வைத்துக்கொள்ளவேண்டும். ஊறுகாய் உள்ள வீடுகளில் தான் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே ஊறுகாய் வீடுகளில் வைத்திருப்பது அவசியம். அந்த ஊறுகாய் பாட்டில்களை நாம் எப்போதும் உப்பு டப்பாக்களுக்கு அருகில் தான் வைக்க வேண்டும்.

kitchen poojai room god live

அரிசி  வைக்கும் இடங்களில் தான் அந்த அரிசியை அளக்கும் படியையும் வைக்க வேண்டும். தானியங்களை எப்போதும் அரிசிக்கு அருகில் தான் வைக்க வேண்டும். தானியங்களை அரிசியை விட்டு வேறு இடங்களில் வைப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல.

kitchen poojai room god live

சமயலறையில் எப்போதும் பூஜை அறை  வைக்க கூடாது. ஒரு வேலை வேறு வழியே இன்றி நம் பூஜை அறை சமையலறையில் இருந்தால் அந்த பூஜை அறையை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். சமைக்கும் எந்த பொருட்களும் அந்த பூஜை அறைக்குள் வைக்கக் கூடாது.

kitchen poojai room god live

மாலை நேரங்களில் நாம் எப்போதும் யாருக்கும் வீட்டின் சமையல் பொருட்களை கடனாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் நம் வீட்டு லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. மேல் குறிப்பிட்டவாறு நாம் நம் வீட்டின் சமையலறையை பராமரித்து வந்தால் நம் வீடுகளில் செல்வம் பெருகும். லட்சுமி கடாச்சம் குடி கொண்டு நாம் சந்தோசமாக வாழலாம்.

kitchen poojai room god live