பொதுவாக நாம் நம்முடைய வீடுகளின் பூஜை அறைகளில் தெய்வங்களின் புகைப்படத்தை வைத்து வழிபடுவோம். ஆனால் நம் வீடுகளில் வைத்து வழிபட கூடாத சில தெய்வங்கள் உள்ளன. அந்த தெய்வங்கள் என்னென்ன? என்பதை இங்கே பார்ப்போம்.
சிவபெருமான்,
சிவபெருமான் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வீடுகளில் வைத்து வழிபடக்கூடாது. அப்படி வழிபட்டால் ஆன்மீக பக்தி அதிகமாகி நம் குடும்பத்தை துறந்து சந்நியாசி ஆகிவிடுவோம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிவபெருமான் பார்வதி இருக்கும் குடும்ப படத்தை வைத்து வழிபடுவதில் எந்த தவறும் இல்லை.
முருகன்,
முருகன் நம் எல்லோர்க்கும் இஷ்ட தெய்வம். அந்த முருகர் கோவணத்துடன் இருக்கும் புகைப்படத்தையும், முருகனின் தலைக்கு மேல் வேல் உள்ளவாறு இருக்கும் புகைப்படத்தையும் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. அப்படி வழிபட்டால் நம் வீட்டில் கஷ்ட காலம் பிறக்கும் என்பது ஐதீகம். மொட்டை வடிவில் உள்ள முருகரையும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடாது.
சனீஸ்வர பகவான், நவகிரகங்கள்,
சனீஸ்வர பகவான் மற்றும் நவ கிரகங்களை நம் வீடுகளில் வைத்து எப்போதும் வழிபடக்கூடாது. அப்படி வழிபட்டால் நம் குடும்ப க ஷ் ட ம் அதிகரிக்கும்.
காளி தேவி,
காளி தேவி மற்றும் ஆ க் ரோ ஷ உருவம் கொண்ட கடவுள் புகைப்படங்களை வீடுகளில் வைத்து வழிபட கூடாது. நடராஜர் சிலை, தவம் செய்வது போன்ற உருவம், ருத்ர தாண்டவம் ஆடும் சிலை போன்ற புகைப்படங்களை நம் வீடுகளில் வைத்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும். சிவபெருமான் லிங்கங்களை வைத்து வழிபட கூடாது. கிழிந்த கடவுளின் புகைப்படங்கள் மற்றும் உடைந்த சிலைகள் நம் வீடுகளில் இருந்தால் உடனே அவற்றை நாம் அப்புறப்படுத்தி விடவேண்டும். கடவுளை வழிபடும்போது நாம் எப்படி தூய்மையாக செல்கிறோமோ அதுபோலவே நம் வீடுகளில் உள்ள கடவுள் புகைப்படங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.