ஆன்மீகம்

4000 அடி உயரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்! புரட்டாசி சனிக்கிழமைகளில் சிவனை வழிபட ஓடிவரும் மக்கள் கூட்டம்!

Nov 01 2021 11:58:00 AM

இன்றைய நவீன காலத்தில் கடவுள் பக்தியை விட ஒரு சுற்றுலா செல்வதில் மக்கள் அதிகம் ஆர்வமாக இருக்கிறார்கள். நிறைய மலைக் கோவில்களில் வீற்றிருக்கும் கடவுளை தரிசிப்பதை விட அந்த மலையை ஜாலியாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள். ஈரோடு மாவத்தையில் பாலமலை என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது.

palamalai sitheswarar temple

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3800 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சேரும் இடத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ஈஸ்வரன் சன்னதி அமைந்துள்ளது. இந்த மலையில் நிறைய பழங்குக்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தான் இந்த கோவிலை பராமரித்து வருகிறார்கள்.

palamalai sitheswarar temple

ட்ரெக்கிங் செய்ய விரும்பும் மக்கள் நிறைய பேர் இந்த ஆலயத்திற்கு சென்று பழங்குடி மக்களின் உதவியுடன் கடவுளை தரிசனம் செய்கிறார்கள். கொங்கு மண்டல மக்கள் நிறைய பேர் புரட்டாசி மாசம் சனிக்கிழமைகளில் ஏழு மலைகளை கடந்து வந்து இந்த பாலமலை ஈஸ்வரனை வழிபடுகிறார்கள். தற்போது கொ*ரோனா காலம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், ஈஸ்வரனின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் அனுதினமும் இந்த பாலமலைக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.

palamalai sitheswarar temple