தகவல்கள்

கடவுளுக்கு பால் குடம் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக்கொள்ள காரணம் என்ன தெரியுமா?

Jan 14 2022 07:06:00 PM

இந்த உலகில் பிரச்சனையே இல்லாத மனிதன் என்று யாரும் கிடையாது. எவ்வளவு பெரிய அம்பானியாக இருந்தாலும் அவருக்கும் சில பிரச்சனைகள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பிரச்சனை என்று வந்தவுடன் முதலில் செல்வது கடவுளிடம் தான். என்னதான் எனக்கு இறைநம்பிக்கை சுத்தமாக இல்லை என்று வெளியில் சொன்னாலும் மனதளவில் கடவுளை நினைக்காத்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

paal kudam abhiseam valipaadu

அந்த மாதிரி கடவுளிடம் செல்லும் பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனை நினைவேறிவிட்டால் அந்த தெய்வத்துக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டிக்கொள்வார்கள். இறைவனுக்கு பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்களில் இந்த பால் குடம் எடுக்கும் விஷயமும் ஒன்று. கடவுளுக்கு வேண்டி பக்தர்கள் பால் குடம் எடுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

paal kudam abhiseam valipaadu

பக்தர்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடிந்தவுடன் சிலர் அந்த தெய்வத்துக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டிக்கொள்வார்கள். பாலின் நிறம் வெண்மை. வெண்மை மிகவும் புனிதமானது. நம்மை சுற்றி உள்ளவர்கள் புனிதமானவரர்களாக இருந்தால் நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்கான பரிகாரம் தான் இது. மேலும் தெய்வத்தை பால் கொண்டு அபிஷேகம் செய்தால் அந்த தெய்வங்களின் மனம் குளிர்ச்சி அடையும்.

paal kudam abhiseam valipaadu

இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் குடங்களை பக்தர்கள் தங்கள் தலையில் வைத்துக்கொண்டு தம்மை மறந்த நிலையில் ஆலயத்தை நோக்கி செல்வார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி பக்தியுடன் அந்த இறைவனை வேண்டினால் நாம் நினைத்த காரியம் கைகூடும். இதற்காகத்தான் பக்தர்கள் தெய்வங்களுக்கு பால் குடம் எடுத்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். நம்மை கஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் அந்த இறைவனையும் சாந்தப்படுத்துகிறார்கள்.

paal kudam abhiseam valipaadu