தகவல்கள்

கோடை காலத்திலும் குளிர்ந்த நிலையில் இருக்கும் சிவபெருமானின் அதிசய ஆலயம்!

Jan 12 2022 04:59:00 PM

ஒரிசா மாநிலத்தில் டிட்லாக்கர் மாவட்டத்தில் கும்காடா என்ற குன்று அமைந்துள்ளது. இந்த குன்றின் மீது சிவபெருமான் பாரவ்தி தேவி வீற்றிருக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கும்காடா கோவில் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். பொதுவாக வடமாநிலங்களில் எப்போதும் குளிர் காலங்களில் அதிக குளிரும், வெயில் காலங்களில் அதிக வெயிலும் அடிக்கும்.

kumkaada sivan tmple orisa

அதுவும் ஒரிசா மாநிலத்தில் குளிருக்கும்,வெயிலுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனால் இந்த ஆலயத்தில் எப்போதும் 10 முதல் 15 டிகிரி வரையிலான குளிர் எல்லா காலங்களிலும் இருந்து கொண்டே இருக்கும். குளிர் காலத்தை பத்தி பேசத் தேவை இல்லை. ஒரிசாவில் குளிர் காலத்தில் எப்பவும் அதிக அளவில் குளிர் இருக்கும்.

kumkaada sivan tmple orisa

ஆனால் வெயில் காலத்தில் 48 டிகிரி வெயில் அடிக்கும் நேரங்களில் கூட இந்த ஆலயத்தில் 10 முதல் 15 டிகிரி குளிர் இருந்து கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் கூட அர்ச்சகர்கள் கம்பளி ஆடை அணிந்துகொண்டு இங்குள்ள பார்வதி தேவி, சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். அதுவும் இந்த ஆலயத்தின் கதவை மூடிவிட்டால் குளிர் நம்மை வாட்டி வதைக்கும். இதற்கெல்லாம் இங்குள்ள சிவபெருமான் பார்வதி தேவி சிலைகளின் தெய்வசக்தி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

kumkaada sivan tmple orisa