தகவல்கள்

புல்லட்டுக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்! இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்பவர்கள் எல்லோரும் இந்த புல்லட் கோவிலை வழிபடாமல் நகரமாட்டார்கள்!

Jan 11 2022 11:04:00 AM

மற்ற நாட்டு மக்களை விட இந்தியமக்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தங்களை காக்கும் கடவுளுக்கு ஆலயம் கட்டுவதை போலவே தங்கள் வாழ்க்கையில் முக்கியமாக விளங்கும் விலங்குகளுக்கும், சில பொருட்களுக்கு கூட ஆலயம் கட்டி வைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஓம் பண்ணா என்பவர் வாழ்ந்துவந்தார். இவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.

oom panna pullat temple

இவர் சொந்தமாக புல்லட் வாகனம் ஒன்றை வைத்திருந்தார். 1991 ஆம் ஆண்டு பாலி போஜ்புர் தேசிய நெடுஞ்சாலையில் தனது புல்லட் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் வேகமாக வண்டியை இயக்கியதால் அந்த புல்லட் வாகனத்தில் பிரேக் வேலை செய்யாமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி அந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

oom panna pullat temple

உடனே அந்த புல்லட்டை அந்த பகுதி காவல் துறையினர் தங்கள் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மறுநாள் காவல் நிலையத்தில் இருந்த அந்த புல்லட்டை காணவில்லை. உடனே காவலர்கள் அந்த புல்லட்டை யாரோ திருடி விட்டார்கள் என்று நினைத்து எல்லா பக்கமும் தேடினார்கள். ஆனால் அந்த புல்லட் மீண்டும் விபத்து நடந்த இடத்தில் மரத்தின் அடியில் நின்றுள்ளது. மீண்டும் அந்த புல்லட்டை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து அந்த புல்லட்டின் டயரில் இருந்த காற்று மற்றும் எரிபொருள் எல்லாவற்றையும் எடுத்துவிட்டார்கள்.

oom panna pullat temple

மறுநாளும் அந்த புல்லட் மீண்டும் அந்த விபத்து நடந்த இடத்துக்கே சென்றுவிட்டது. தொடர்ந்து 5, 6 முறை காவல் நிலையத்தில் இருந்த புல்லட் அந்த விபத்து நடந்த இடத்துக்கே சென்றதால் இது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி என்பதை உணர்ந்து புல்லட்டை அந்த மரத்தில் அடியிலேயே நிறுத்தி விட்டார்கள். ஓம் பண்ணாவின் உறவினர்கள் மற்றும் அந்த ஊர் மக்கள் எல்லோரும் அந்த இடத்தில் சிறிய அளவில் கோவில் எழுப்பி ஓம் பண்ணா மற்றும் அந்த புல்லட்டை வழிபட தொடங்கினார்கள்.

oom panna pullat temple

இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் மக்கள் எல்லோரும் இந்த புல்லட் கோவிலுக்கு வந்து புல்லட்டை வழிபட்டு விட்டு தான் செல்வார்கள். வழிபட தவறியவர்களுக்கு சிறிய அளவில் விபத்தும், சில தடுமாற்றங்களும் வந்துள்ளன. ஓம் பண்ணாவை மரியாதை செய்யும் வகையில் இந்த சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மிதமான வேகத்திலும், ஹாரன் அடிக்காமலும் தங்கள் வாகனத்தை இயக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

oom panna pullat temple