தகவல்கள்

ஓஜா போர்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்த போர்டை வச்சு ஆ*விகளுடன் பேசலாம் என்று சொல்வது உண்மையா?

Sep 27 2021 11:31:00 AM

டிமாண்ட்டி காலனி மற்றும் சில ஆங்கில படங்களில் ஓஜா போர்டை வச்சுக்கிட்டு இ*றந்துபோன நபர்கள் இந்த இடத்தில் யாராவது இருக்காங்களா? தங்களை விட்டு பிரிந்து இ*றந்த நண்பர்களுடன் பேச முயற்சி செய்வது போல சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த காட்சிகளை நாம் படத்தில் பார்க்கும் போது இதெல்லாம் சுத்த பொய், கப்ஸா அடிச்சு விடுறாங்க என்று எல்லோரும் நினைப்பார்கள். இதெல்லாம் படத்துல மட்டும் தான் சாத்தியம் என்று நாம் நினைக்கலாம்.

ojha board real incident

உண்மையில் ஓஜா போர்டு என்ற ஆ*விகளுடன் தொடர்பு கொள்ளும் போர்டு உள்ளது. நான் கல்லூரி படிக்கும் கால கட்டத்தில் நண்பர் ஒருவர் வி*பத்தில் இ*றந்துவிட்டார். சில நாட்கள் அவருடைய நியாபகமாவே இருந்தது. அவர் எங்க எல்லாருடனும் நல்ல நட்புடன் இருப்பார். இவர் எப்படி இ*றந்தாரு, இவர்கிட்ட நம்ம பேசிப்பாக்கலாம் என்று நாங்க ஒரு 5 பேர் சேர்ந்து ஓஜா போர்டு வாங்கினோம்.

ojha board real incident

இரவு நேரத்தில் ஹாஸ்டலில் எங்கள் அறையில் நாங்க 5 பெரும் ஒக்காந்து அந்த ஓஜா போர்டில் நண்பருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அப்போது எங்கள் அறையின் தட்ப வெப்ப நிலை முற்றிலும் மாறிவிட்டது. பேன் ஓடல, ஆனால் காத்து ப*யங்கரமா வீச ஆரம்பித்தது. நாங்க இல்லாம எங்கள் அறைக்குள் புதிதாக இரண்டு ஆ*விகள் புகுந்துவிட்டது. ஆனால் அந்த ஆ*விகளில் எங்க நண்பர் இல்லை என்பதை தெரிந்துகொண்டோம்.

ojha board real incident

நாங்க கேட்கும் கேள்விகளுக்கு ரொம்ப வித்யாசமாக பதில் அளித்து எங்களை அந்த ஓஜா போர்டை விட்டு நகராமல் அந்த ஆ*விகள் பார்த்துக் கொண்டது. என்னடா இப்படி மாட்டிக்கிட்டோமே என்று நாங்க எல்லோரும் முழிச்சுக்கிட்டு இருந்தோம். அப்போது நண்பர் ஒருவர் திடீரென ரொம்ப வியர்த்து ஓஜா போர்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் மட்டும் அன்னைக்கு வெளியேறவில்லை என்றால் எங்க நிலைமை சங்கு தான்.

ojha board real incident

அடுத்த ரெண்டு நாளைக்கு எங்க எல்லோருக்கும் குளிர் கா*ய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நண்பர்கள் அந்த போர்டை எங்ககிட்ட குடுங்க, நாங்களும் விளையாண்டு பாக்குறோம் என்று சொல்லி வாங்கிக்கொண்டார்கள். அவங்களும் அதே மாதிரி தேவை இல்லாமல் கெ*ட்ட ஆ*விகளிடம் மாட்டிக்கிட்டு கா*ய்ச்சல் வந்து படுத்து கிடந்தாங்க. ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது, ஓஜா போர்டு வைத்து ஆ*விகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம். எந்த விஷயமா இருந்தாலும் நம்ம சரியா பண்ணுனா நம்ம யார் கூட பேச ஆசைப்படுறோமோ அவங்களிடம் பேசிவிடலாம். ஆனால் அதுக்கெல்லாம் ம*ன தைரியமும், சரியான பயிற்சியும் இருந்தால் மட்டும் தான் எந்த சி*க்கலும் இல்லாமல் தப்பிக்க முடியும்.

ojha board real incident