தகவல்கள்

எந்தவித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அந்த காலகட்டங்களில் முன்னோர்கள் எப்படி நவகிரகங்களை கணித்தார்கள்?

Jun 21 2021 06:19:00 PM

உலகம் தற்போது அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குகிறது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் அறிவியல் அறிவு நிறைந்து காணப்படுகிறது. நம் முன்னோர்கள் வாழ்ந்த தொன்மையான காலகட்டங்களில் எந்தவித அறிவியல் முன்னேற்றமும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் கண்டுபிடிப்புகள் நம் அனைவரையும் வியக்க வைக்கும்படி அமைந்துள்ளன.

nava graham old people

உதாரணமாக நவகிரகங்கள் ஒன்பது என்று நம் கோவில்களில் பல நூறு வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் அறிந்து வடிவமைத்துள்ளார்கள். அந்த விஷயத்தையே நாம் இப்போதுதான் மொத்தம் ஒன்பது கோள்கள் என்று கண்டுபிடித்துள்ளோம். அதேபோல செவ்வாய் என்ற ஒரு கோள் இருப்பதையும் அறிந்து செவ்வாயை நம் முன்னோர்கள் வணங்கியுள்ளனர்.

nava graham old people

செம்மையான மணல்பரப்பு கொண்ட பகுதிதான் செவ்வாய் என்று நம் அறிவியல் ஆய்வாளர்கள் அண்மையில் தான் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை நம் முன்னோர்கள் ஒரு கிரமாகவே நினைத்து வழிபட்டுள்ளனர். ஆனால் சூரியன் ஒரு எரிநட்சத்திரம் என்று நம் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாமே எந்தவித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஆச்சர்யமூட்டும் ஒரு விஷயம் தான். இப்பவும் திண்ணையில் அமர்ந்திருக்கும் பாட்டி காலண்டரே பார்க்காமல் இன்னும் பத்து வருசத்துக்கு அப்புறம் வரும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களை கூட துல்லியமாக கணித்துக் கூறுவார்கள்.

nava graham old people