தெய்வீகம்

சுவாமி மலை முருகப்பெருமானின் அதிசயங்கள் : குடும்பத்தில் ஐஸ்வர்யம் ஜொலிக்க சுவாமிமலை முருகனை சரணடையுங்கள்

Jan 22 2021 02:35:00 PM

எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடுதான் இந்த சுவாமி மலை. தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. அந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரே மலை இந்த சுவாமி மலைதான். இங்கு மொத்தம் அறுபது படிகள் உள்ளன. தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. இந்த அறுபது படிகளும் அறுபது தமிழ் வருடங்களை குறிக்கின்றன. சபரி மலையில் எப்படி பதினெட்டு படிகள் புனிதமாக கருதப்படுகிறதோ, அதை போலவே இந்த ஸ்வாமி மலையின் 60 படிகளும் புனிதமாக கருதப்படுகின்றன. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இந்த சுவாமி மலை அமைந்துள்ளது.

swamy malai murugan

முருகப்பெருமானின் சிறப்புகள் 
இங்குள்ள முருகப்பெருமானுக்கு விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள் நிறைந்த ஞானியாக காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யும் போது பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அப்பனுக்கே பாடம் சொல்லித்தந்த சுப்பையா பள்ளிகொண்டுள்ள இடம்தான் இந்த ஸ்வாமி மலை.

swamy malai murugan

திருக்கோவில் வரலாறு 
நம் எல்லோரையும் படைத்த பிரம்மன் ஒரு முறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. படைப்பு தொழில் செய்யும் உமக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என முருகன் கேட்கிறார். பிரம்மன் அதற்கு விட தெரியாமல் முழித்திருக்கிறார். உடனே முருகன் பிரம்மனின் நான்கு தலைகளையும் ஒரு கொட்டு கொட்டி, தம் பாதத்தால் எட்டி உதைத்து சிறையில் அடைகிறார். இதன் பின்னர் படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மா சிறையில் இருப்பதை அறிந்து அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் படி திருமால் சிவபெருமானிடம் வேண்டுகிறார். அதைக்கேட்ட சிவபெருமான் முருகரிடம் பிரம்மாவை விடுவிக்கும் படி கேட்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றுக்கு ஏற்றதுபோல் அவரும் பிரம்மனை விடுதலை செய்கிறார்.

swamy malai murugan

இதைப்பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகப்பெருமானை தம் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு பிரம்மனுக்கே தெரியாத அந்த ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பெருமையை நீர் எனக்கு கூற வேண்டும் என கேட்கிறார். எல்லாரும் அறிந்து விடக்கூடாது என்று சிவபெருமானின் காதருகில் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை கூறுகிறார். இவை அனைத்தும் இந்த ஸ்வாமி மலையில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

swamy malai murugan

சுவாமிமலை முருகனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் 
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், சிறந்த கல்வி, உயர் படிப்பு, வேலைவாய்ப்பு, பதவியில் உத்தியோக உயர்வு போன்றவற்றுக்காக இங்கே பக்தர்கள் தினமும் இங்கே வருகிறார்கள். சுவாமி மலை முருகனை வழிபட்டு வந்தால் நமக்கு வரக்கூடிய தீமைகள், நோய், நாம் செய்த பாவம் இவை அனைத்தும் நம்மை விட்டு விலகி விடும்.

swamy malai murugan

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை போடுதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குதல் போன்றவற்றை வேண்டி கடவுளுக்காக செய்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவில் செல்லும் மக்கள் அங்கிருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எம்பெருமான் முருகனை வழிபட்டால் நம் வாழ்க்கை மேன்மை அடையும்.

swamy malai murugan