தகவல்கள்

மவுன விரதம் எதற்காக இருக்கிறார்கள்? அதனால் என்ன பலன்? செல்வம் தரும் மவுன விரதம்! மாதம் ஒருமுறை போதும், பணம் வீட்டில் வந்துகொண்டே இருக்கும்!

Nov 24 2021 02:45:00 PM

மவுன விரதம் பற்றி கேள்விபட்டிருப்போம். அந்த நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் இருப்பது மட்டுமல்ல மவுன விரதம். இதோடு பட்டினி விரதமும் இருக்க வேண்டும். பட்டினி விரதம் இருப்பது உ லுக்கு நல்லது. முழு உடலையும் சீரமைக்கும் என்பார்கள். மவுன விரதம் இருந்தால் என்னவாகும்? இதனால் என்ன பயன்? என என்றாவது யோசித்தது உண்டா? மவுன விரதம் இருக்கும்போது, கண்டிப்பாக பட்டினி விரதமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மாலை சாமியை பூஜித்துவிட்டு, அதற்கு பின்னர் உணவை எடுத்து கொண்டு மவுன விரதத்தை முடிக்க வேண்டும். 

mouna-viratham viratham

குறிப்பாக கார்த்திகை தீபத்தன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அதுமட்டுமா? பவுர்ணமி தினத்தன்று இருப்பது மேலும் சிறப்பானது. மவுன விரதம் இருப்பதால் என்ன பலன் என்றால், என்றாவது நீங்க மிகவும் மன அ ழுத்தமாக உணர்கிறீர்கள் அல்லது வேலைப்பளு, மனது குழப்பமாகவே உள்ளது, இல்லை ஏதாவது ஒரு விஷயத்தை அடைய ஈகை கொண்டுள்ளீர்கள் ஆனால் மனதில் ஏதாவது பற்றிய குழப்பம் நீடித்து கொண்டே இருக்கிறது என்றால் உடனே மவுன விரதம் இருந்துவிட்டு, அடுத்த நாள் பாருங்கள் குறிப்பிட்ட விஷயம் குறித்து தெளிவான முடிவை உங்களால் எடுத்திருக்க முடியும். ஏனெனில் மவுன விரதம் என்பது உங்களது எண்ணங்களை வரிசைப்படுத்தி எது தேவை, எது தேவை இல்லாதது என்பதை பிரித்தறியும். 

mouna-viratham viratham

அந்த காலத்தில் முனிவர்கள், ரிஷிகள் ஏதாவது தனக்கு வேண்டிய செயலை முடிக்கும்வரை சில காலம் மவுனம் மேற்கொள்வார்களாம். அந்த செயல் முடிந்த பின்னர் தான் பேசவே துவங்குவார்களாம். மவுனமாக இருக்கும்போது தான் எண்ணங்கள் வலிமையாகுமாம். இப்போது தான் தெரிகிறது, சாதனை செய்தவர்கள் ஏன் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள் என்பது. மவுன விரதம் இருப்பதால் மற்றொரு பலனும் இருக்கிறது. நமக்கு வரும் பெரும்பாலான பி ரச்சனைக்கு முக்கிய காரணமே வாய் தான், வாயடங்கி இருந்தாலே போதும். பாதி பி ரச்சனை வராது. 

mouna-viratham viratham

உங்களது மனம் குழப்பமாகவே இருக்கிறது என்றால், ஏதாவது ஒரு சாமியை நினைத்துக்கொண்டு உடனே மவுன விரதம் இருந்து விடுங்கள். உங்களுக்கு வேலை இருக்கும் நாட்களில் இருக்க வேண்டாம். மவுன விரதம் இருக்கும் நாட்களில் போன், யாரிடமும் சைகையால் உரையாடுவது என எதுவுமே இருக்க கூடாது. முக்கியமாக காகிதத்தில் எழுதி காட்டுவது என எதுவுமே இருக்க கூடாது. மற்றபடி சமைப்பது போன்ற அன்றாடம் செய்யும் வேலைகளை செய்யலாம். ஆனால் அதிகமாக போன், டிவி பார்ப்பது கூடாது. அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதிர்காலம் பற்றி அல்லது மனதை கலங்கடிக்கும் விஷயங்களை கண்டறிந்து ஒதுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். 

mouna-viratham viratham

நீங்களே யோசியுங்கள். ஒரு நாளில் 24 மணிநேரம் உள்ளது. அந்த நேரத்தில் என்றாவது உங்களை பற்றி பெருமையாக எண்ணும் விஷயங்கள் பற்றி யோசித்தது உண்டா? எதிர்காலம் பற்றி யோசித்தது உண்டா? உங்களது கனவுகள் பற்றி சிந்தித்தது உண்டா? இவையாவும் பற்றி சிந்திக்க உங்களுக்கு நேரம் இருக்காது. ஏனெனில் அன்றாட வேலைபளு. மாதம் ஒருமுறை பவுர்ணமி தினத்தில் மவுன விரதம் இருக்கும்போது, எண்ணங்கள் உறுதியாகி ஒரு வருடத்தில் அடைய வேண்டிய இலக்கை ஆறே மாதத்தில் அடைந்துவிடலாம் என்கிறார்கள்.