தகவல்கள்

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால், குடும்பம் நீர்மூலமாகிவிடுமா? “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” பழமொழி, அப்படியே உல்டாவா போச்சு

Feb 22 2021 08:33:00 PM

மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலே, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கொஞ்சம் வித்தியாசமா தான் பார்க்கிறாங்க. அவங்க ஏதாவது குறை உள்ள வீட்டில் தான் திருமணம் முடிக்க வேண்டுமாம். இது யார் கிளப்பிவிட்ட நம்பிக்கைன்னு தெரியல, என்னுடைய பள்ளி பருவ நண்பர்கள் இருவருக்கு, இந்த ஒன்றை காரணம் காட்டியே திருமணம் தள்ளிப்போகிறது. இந்த இலட்சணத்தில், "ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழிக்கான அர்த்தத்தை தவறாக பரப்பி வைத்துள்ளனர்.

moolam star moolam-star

"மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அரசனைப் போல் வாழ்வான், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால் குடும்பமே நீர்மூலம் ஆகிறது" என்று, யாரோ பொழுது போகாத ஆசாமி என்னைக்கோ சொன்னதை, இன்னைக்கு கட்டிக்கிட்டு அழுவறாங்க. சும்மாவே ஒரு பெண் திருமண வாழ்க்கைக்குள் நுழைவது சவாலான காரியம். இதில் இந்த மாதிரி, எக்குத்தப்பா பழமொழிக்கான அர்த்தத்தை பரப்பிவிட்டால், இதனை தூக்கிக்கொண்டு வரவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.

moolam star moolam-star

முக்கால்வாசி தவறான தகவலை தலையில் கட்டி, எனக்கே பல ஜாதகம் கை நழுவிபோயிருக்கிறது. உண்மையில், "ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்பதற்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால், "அது ஆண் மூலம்" கிடையாது. ஆனி மாதம் வரும் மூல நட்சத்திரம் என்று புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும் இதற்கு, பௌர்ணமி யோகம் என்று அர்த்தம். பௌர்ணமி யோகம் இருப்பவர்கள் எல்லாம், அரசனைப் போல வாழ்வார்கள் என்று ஜோதிடம் சொல்கிறது.

moolam star moolam-star

பெண் மூலம் என்பது இங்கே கன்னி ராசியை குறிக்கிறது. கன்னி ராசிக்கு பெண் என்ற, இன்னொரு பெயரும் உண்டு. கன்னியில் சூரியன் வரும் போது அது புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாத மூல நட்சத்திரம், பெரும்பாலும் அஷ்டமி அல்லது நவமி திதிகளில் வரும். அதனை துர்காஷ்டமி என்றும் கூறுகின்றனர். புரட்டாசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தில், தேவி அசுரர்களை நிர்மூலம் செய்தார். இதைத் தான் பெண் மூலம் நிர்மூலம் என்கிறார்கள். இது தெரியாமல், ஒன்னு, ரெண்டா யாரோ சொல்வதைக் கேட்டு, சில் பதர்கள் உதிர்க்கும் வார்த்தையால் தான், பல பெண்களின் வாழ்வு நிர்மூலமாகிறது.