தெய்வீகம்

#maduraimeenakshi: சுகப்பிரசவம் நடக்க, அம்மனின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி வழிபடும் முறை!

Mar 18 2020 12:26:00 AM

மீனாட்சி அம்மன் கோவிலில் எத்தனை சிறப்புகள்? கோவில் சிற்பங்கள், ஓவியங்கள். அவை சொல்லும் கதைகள் என ஒரு நாள் போதுமா? கோவிலின் அற்புதத்தை காண? இவற்றையெல்லாம் காட்டிலும், கோவிலில் உள்ள அரிதான பரிகாரங்களை எல்லாம் கேள்விப்பட்ட போது மலைத்து போனேன்.

meenatchi-amman-temple madurai ancient-temple hindu

சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பது இந்த கால கட்டத்தில் கடினமான நிலையாக மாறியுள்ள  நிலையில், அதனை இலகுவாக்க கடவுளை தவிர வேறு யாரிடமும் முறையிட முடியாது. என்னதான் கர்ப்ப காலத்தில் உடலை பக்குவமாக பாதுகாத்து இருந்தாலும், ஏதோ ஒரு சூழலால் அறுவை சிகிச்சைக்கு ஆளாக வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் சக்தி வாய்ந்த தெய்வங்களுக்கு வேண்டுதல் வைப்பது வழக்கம். அவ்வாறே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்பாள், சுகப்பிரசவம் வேண்டி வருபவர்களுக்கு அருள் புரிகிறார்.      

meenatchi-amman-temple madurai ancient-temple hindu

சுந்தரேசுவரர் சன்னிதிக்கு செல்லும் வழியே சரியாக இடது புற தூணில் பாவாடை அணிவித்து ஒரு தெய்வம் இருக்கும். கருவுற்று இருக்கும் பெண்கள், தங்களுக்கு  சுகப்பிரசவம் ஆக வேண்டி, அந்த  தெய்வத்தின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி வேண்டுதல் வைப்பார்கள். அவ்வாறே ஊற்றப்பட்ட எண்ணெய்யை எடுத்து வந்து கர்ப்பிணிப்பெண்கள் தங்களது வயிற்றில் தடவினால் சுகப்பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை அங்கே  நிலவுகிறது.